கொலொம்பியாவில் நடைபெறும் உயிரியல் பன்முகத்தன்மை பற்றிய மாநாட்டிற்கான பங்கீட்டு கட்சிகளின் 16 வது மாநாட்டில் “சூடான நீரில் உலகளாவிய பெருங்கடல் ஒப்பந்தம் எவ்வாறு காலநிலை சார் நடவடிக்கைகளை அதிகரிக்கும்”, எனும் தலைப்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஓர் அறிக்கை காலநிலை மாற்றத்தினால் கரையோர மக்களின் வாழ்வில் ஏற்படும் தாக்கம் மற்றும் பெருங்கடல் மீது ஏற்படும் தாக்கம் ஆகியன பற்றி ஆதாரபூர்வமாக குறிப்பிட்டுள்ளதுடன், அதற்கான தீர்வுகளையும் முன்வைத்துள்ளது.
இந்த அறிக்கை கடல் வெப்பமயமாதல், பவளப்பாறைகள் நிறமிழத்தல், கடல்வாழ் உயிரினங்களின் பன்முகத்தன்மையில் மாற்றம், கடல் பனி கரைதல், கடல் நீர் மட்டம் உயர்தல் மற்றும் தீவிரமான காலநிலை மாற்றங்கள் பற்றிய கடந்த ஐந்து ஆண்டு கால விஞ்ஞான ஆய்வுகளின் சுருக்கத்தை தொகுத்து வழங்கி உள்ளது.
ஜ1ஸ ஓர் சமீபத்திய ஆய்வின் கண்டுபிடிப்புகளுக்கு அமைய, கடலின் காபனீரொட்சைட்டை (co2) உறியும் வேகம் மனிதர்கள் காபனீரொட்சைட்டை வெளியிடும் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் போகலாம் என எச்சரிக்கின்றது.
ஜ2ஸ இவ்வுலகில் வசித்து வரும் பில்லியன் கணக்கான மக்களின் வாழ்வுகளின் மிக ஆழமான விளைவுகளை ஏற்படுத்தி வரும் இம்மாற்றங்கள் அனைத்தும் பெருங் கடலுக்கு மிகப் பெரிய நட்டத்தை உருவாக்கி உள்ளது.
கிரீன்பீஸ் தெற்காசியாவிற்கான பிரச்சார மேலாளர் அவினாஸ் சன்சல் குமார் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் இருக்கும் எமது நெருக்கமான நண்பரை பாதுகாப்பதற்கு நாம் அவசரமாக நடடிவக்கை எடுக்க வேண்டும்.
காபனீரொட்சைட்டு வெளியிடதலை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்ளும் அதே வேளையில் அரசாங்கங்கள் பெருங்கடலில் பாதுகாக்கப்பட்ட வலயங்களை உருவாக்கக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தக் கூடிய உலகப் பெருங்கடல் ஒப்பந்தத்தை அங்கீகரிக்க வேண்டும்.
கடலின் காபனீரொட்சைட்டு சேமிப்பு வீதத்தை மேம்படுத்தி, எம் அனைவருக்கும் பயனளிக்கக் கூடிய இவ்விடயம் கடல் மற்றும் கடல்சார் சூழல் காலநிலை மாற்றத்தை திறம்பட எதிர்கொள்வதனை மேலும் அதிகரிக்கும்.”
கிரீன்பீஸ் தெற்காசிய பிரச்சாரத்தில் இலங்கையில் செயற்படும் அனிடா ருமேசி பெரேரா பின்வருமாறு குறிப்பிட்டார்.
உலகவாழ் அனைத்து உயிர்களையும் கடல் ஆதரிக்கின்றது. ஐக்கிய நாடுகள் உயிரியல் பன்முகத்தன்மை மாநாடு நடைபெறுவதற்கு முன்னர் கடலினை பாதுகாப்பதனால் நாம் பெறக் கூடிய நன்மைகள் பற்றி மக்களை விழிப்புணர்வூட்டுவதற்காக கொழும்பு தாமரை கோபுரத்தில் நாம் ஓர் காற்று நிரப்பப்பட்ட மாபெரும் ஆக்டோபஸ் சின்னத்தினை காட்சிப்படுத்தினோம்.
புதிய ஜனாதிபதி மற்றும் வருங்கால அரசாங்கத்தின் சுற்றுச் சூழல் சார்ந்த நடடிவடிக்கைகளில் ஓர் முன்னரிமை வழங்கப்பட வேண்டிய நடவடிக்கையாக உலக பெருங்கடல் உடன்படிக்கையில் கையொப்பமிட்டு, அதன் ஒப்புதலை மேற்கொள்ளுமாறு நாம் கேட்டுக் கொள்கிறோம்.
காலநிலை மாற்றம், வெப்ப அலைகள் மற்றும் வெள்ளப் பெருக்கு என்பன இப்போது அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் இத் தருணத்தில் எம் வசம் இருக்கும் நேரடியான, பலதரப்பு தீர்வுகளை நாம் செயற்படுத்த வேண்டும்.
உயிரியல் பன்முகத்தன்மை பற்றிய மாநாட்டிற்கான பங்கீட்டு கட்சிகளின் 16 வது மாநாட்டில் கிரீன்பீஸ் வளர்ந்து வரும் நாடுகளின் உயிரியல் பன்முகத்தன்மையை அபிவிருத்தி செய்வதற்கு அவசியமான நிதி வளங்களை வழங்குவதனை மேலும் அதிகரிப்பதில் கண்ணோட்டம் செலுத்துவதுடன், உயிரியல் பன்முகத்தன்மை மற்றும் காலநிலைக்கு இடையிலான ஒருங்கிணைப்பு, கடல் மற்றும் கடலோர மக்களுக்கு ஆதரவை வழங்குவதிலும் கண்ணோட்டம் செலுத்தும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM