நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ராகவா லோரன்ஸ் நடிப்பில் தயாராகும் 25 ஆவது திரைப்படத்திற்கு 'கால பைரவா' என பெயரிடப்பட்டு, அதன் முதல் பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது.
ராகவா லோரன்ஸின் பிறந்த நாளான இன்று அவர் நடிக்கும் இப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டிருப்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.
தெலுங்கு இயக்குநர் ரமேஷ் வர்மாவின் இயக்கத்தில் உருவாகும் 'கால பைரவா' எனும் இந்தத் திரைப்படம் பான் இந்திய சுப்பர் ஹீரோ திரைப்படமாக உருவாகிறது.
இந்த திரைப்படத்தினை நீலாத்ரி புரொடக்ஷன்ஸ் எனும் நிறுவனம் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது.
இந்த திரைப்படத்தில் ராகவா லோரன்சுடன் பணியாற்றும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கு திரையுலகினர் பான் இந்திய திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு, வெற்றி காண்பதில் அனுபவம் பெற்றிருப்பதால் ராகவா லோரன்ஸ் நடிக்கும் இந்தத் திரைப்படமும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக வெளியாகி வெற்றி பெறும் என அவதானிக்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM