ஜெயம் ரவி நடிப்பில் தயாராகி தீபாவளி திருநாளன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் 'பிரதர்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பிரதர்' எனும் திரைப்படத்தின் ஜெயம் ரவி, பிரியங்கா அருள் மோகன், பூமிகா சாவ்லா, விடிவி கணேஷ், நட்டி என்கிற நட்ராஜ் , அச்யுத் குமார் , சரண்யா பொன்வண்ணன், சீதா, எம். எஸ். பாஸ்கர் ,சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
விவேகானந்த் சந்தோஷம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். அக்கா , தம்பி இடையேயான உறவை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்கிரீன் சீன் என்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இந்த திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வுகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அண்மையில் டுபாயில் படத்தினை விளம்பரப்படுத்தும் போது ரசிகர்கள் முன்னோட்டத்தை எப்போது வெளியிடுவீர்கள்? என கேட்டனர் இதனால் படக் குழுவினர் முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளனர். இதற்காக சென்னையில் படக் குழுவினர் பங்கு பற்றிய பிரத்யேக முன்னோட்ட வெளியீட்டு நிகழ்வும் நடைபெற்றது.
இதன் போது பேசிய படத்தின் இயக்குநர் ராஜேஷ், '' ஜெயம் ரவியும் , நானும் இணைந்து இதற்கு முன்னரே பணியாற்ற வேண்டிய சூழல் இருந்தது.
ஆனால் பல்வேறு காரணங்களால் இணைந்து பணியாற்ற முடியவில்லை, பிறகு இந்த 'பிரதர்: படத்தின் கதையை அவரிடம் சொன்னேன். கதையை முழுவதுமாக கேட்டுவிட்டு இணைந்து பணியாற்றுவோம் என்றார். அதன் பிறகு படத்தின் கதையை தயாரிப்பாளர் சுந்தர் ஆறுமுகத்திடம் விவரித்தேன்.
அவர் கதையை முழுவதுமாக கேட்டுவிட்டு தயாரிக்க சம்மதம் தெரிவித்ததுடன் முழுமையான ஒத்துழைப்பை தற்போது வரை வழங்கி வருகிறார்.
எம்முடைய இயக்கத்தில் உருவான திரைப்படம் தீபாவளி திருநாள் அன்று வெளியாவதால் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
மேலும் இந்தத் திரைப்படத்தை படமாளிகையில் குடும்பத்துடன் பார்த்து ரசித்து கொண்டாட வேண்டிய படைப்பாக உருவாக்கி இருக்கிறோம். ஏனெனில் இந்தத் திரைப்படம் குடும்பத்துடன் காண வேண்டிய பொழுதுபோக்கு திரைப்படம்.
'பாஸ் என்கிற பாஸ்கரன்' மற்றும் 'சந்தோஷ் சுப்பிரமணியம்' இந்த இரண்டு திரைப்படத்தையும் இந்த காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் மாற்றம் செய்து அதனுள் அக்கா , தம்பி இடையேயான பாசத்தை உணர்வுபூர்வமாக இணைத்து இருக்கிறோம்.
இந்தத் திரைப்படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது ஒவ்வொரு ரசிகர்களுக்கும் 'அக்கா' என்ற உறவு முறை குறித்த சிந்தனையும், தொடர்பும் உண்டாகும்.
அந்த அளவிற்கு இந்த திரைப்படத்தில் அக்கா கதாபாத்திரத்தில் நடிகை பூமிகா சாவ்லா சிறப்பாக நடித்திருக்கிறார். தம்பியாக ஜெயம் ரவி வழக்கமான உற்சாகத்துடன் நடித்திருக்கிறார். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்'' என்றார்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM