ஒருங்கிணைந்த வலிமை - டிரைடென்ட் கோர்ப்பரேஷன் (Trident Corporation) இலங்கையில் தனது மூலோபாய சந்தை விரிவாக்கத்தை தலைமை தாங்கி வழிநடத்த தனது பிரத்தியேக தேசிய விநியோகஸ்தராக விவோ (Vivo) நிறுவனத்தை நியமித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் செல்லிடத் (மொபைல்) தொலைபேசித்துறையில் முன்னணி வகிக்கும் டிரைடென்ட் கோர்ப்பரேஷன், இலங்கையின் விநியோக நிலப்பரப்பில் தனது ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு vivo ஸ்மார்ட்போன்களுக்கான உத்தியோகபூர்வ தேசிய விநியோகஸ்தராக நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த மூலோபாயக் கூட்டாண்மை vivo இன் அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் ட்ரைடெண்டின் விரிவான உள்ளூர் அடிச்சுவடு ஆகியவற்றை அபிவிருத்தி செய்வதன் மூலம் மொபைல் துறையை மறுவரையறை செய்யும் பணியை முன்னெடுத்துச் செல்லவுள்ளது.
டிரைடென்ட் கோப்பரேஷனின் வதிவிட முகாமையாளரான ஹில்மி நியாஸ் கருத்து தெரிவிக்கையில்,
“இலங்கைச் சந்தையில் உயர்தரமான தயாரிப்புகளை வழங்குவதற்கான எங்கள் மரபு மொபைல் தொழில்நுட்பத்தில், vivo இன் புத்தாக்க உத்திகள் மிகச் சிறந்த பலாபலன்களை பெற்றுத்தரும்.
இந்த ஒத்துழைப்பு கணிசமான வளர்ச்சியை உறுதி செய்வதோடு, நாடு முழுவதும் எங்கள் விநியோக வலையமைப்பை மென்மேலும் வலுப்படுத்தும் நீண்ட கால வெற்றிக்கு உறுதியான அத்திவாரமாக அமையும் " என்றார்.
இந்தக் கூட்டாண்மை மீது தனது வலுவான நம்பிக்கையை வெளிப்படுத்திய vivo ஸ்ரீலங்காவின் பிரதம நிறைவேற்று அதிகாரியான கெவின் ஜியாங் கருத்து தெரிவிக்கையில்,
"vivoவின் மூலோபாயம் விலைப் போட்டியை விட புதுமை மற்றும் உயர்தர தயாரிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது.
எங்கள் பங்குதாரர்கள் மற்றும் இறுதிப் பயனர்கள் இருவருடனும் அர்த்தமுள்ள உறவுகளை உருவாக்கும் அதே வேளையில் அதிநவீனமான, உயர்தர தயாரிப்புகளை வழங்குவதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம் " எனக் கூறினார்.
50 க்கும் மேற்பட்ட நாடுகளில் பிரசன்னம், மற்றும் உலகளாவிய ரீதியில் 500 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர் தளம் ஆகிய அசைக்க முடியாத பெரும் பலத்தைக் கொண்டுள்ள vivo நிறுவனம், ஸ்மார்ட்போன் துறையில் தன்னை ஒரு மேலாதிக்க சக்தியாக நிலைநிறுத்தியுள்ளது. நவீன தொழில் நுட்பத்தில், பல பரிமாணங்களில் முன்னணி வகித்து வரும் Trident இன் நிபுணத்துவம் மற்றும் அதன் வலுவான உள்கட்டமைப்பு ஆகியவை இலங்கை சந்தையில் அதன் நீடித்த வளர்ச்சியை உறுதிப்படுத்தும். உயர்தர மொபைல் தயாரிப்புகளுக்கான அதிகரித்து வரும் தேவையைப் பயன்படுத்துவதற்கு இந்தக் கூட்டாண்மை மூலோபாய ரீதியாக வழி வகுக்கும்.
ட்ரைடென்ட் கோர்ப்பரேஷன் பொது முகாமையாளர் பிரியந்த ஜயசிங்க
"எமது ஆழமான சந்தை நுண்ணறிவுகள், vivo இன் உலகளாவிய பார்வையுடன் இணைந்து நுகர்வோர் ஈடுபாட்டை கணிசமாக மேம்படுத்துவதுடன் விற்பனை வளர்ச்சியை ஊக்குவிக்கும்" என்றார்.
நிலையான அபிவிருத்தி இலக்குகளுடன் நிறுவனத்தின் சீரமைப்பை வெளிப்படுத்திய vivo ஸ்ரீலங்காவின் பிரதிப் பொது முகாமையாளர் கிஹான் நாணயக்கார,
"எங்கள் அபிவிருத்தி மூலோபாயத்தின் மையக் கருத்தின் பிரகாரம் அன்றாட வாழ்க்கையை வளப்படுத்தும் அறிவார்ந்த மற்றும் நிலைத்தன்மை கொண்ட தயாரிப்புகளை உருவாக்க Vivo தன்னை அர்ப்பணித்துள்ளது," எனக் கூறினார்.
நிலைத்தன்மைக்கான இந்த அர்ப்பணிப்பு ஐக்கிய நாடுகளின் 2015 நிலையான வளர்ச்சி இலக்குகளில் தொகுக்கப்பட்டுள்ளது, இது பசுமையான கூட்டுவாழ்வு, கூட்டு மதிப்பு உருவாக்கம் மற்றும் சமூக நன்மை ஆகியவற்றை வலியுறுத்துகிறது.
டிரைடென்ட் எதிர்காலத்தை நோக்கி முன்னேறும் போது, vivo இன் உலகளாவிய நோக்கங்களுடன் இணைந்த நிலைத்தன்மைக்கான உறுதியான அர்ப்பணிப்பு எங்களின் போட்டித்தன்மையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் இலங்கை சந்தையில் எங்களது தலைமைத்துவ நிலையை உறுதிப்படுத்தும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM