சீனாவில் பாடசாலை வாயிலிற்கு அருகில் கத்திக்குத்து சம்பவம் - மூவர் காயம்

29 Oct, 2024 | 12:17 PM
image

சீனாவில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர்.

சீன தலைநகரில் உள்ள ஹைய்டியன் மாவட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஐம்பது சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்,காயமமைடந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் எவரும் ஆபத்தான நிலையில் இல்லை என குறிப்பிட்டுள்ளனர்.

இரண்டு சிறுவர்கள் மயங்கிய நிலையில் காணப்படுவதையும் குருதி வழிந்தோடுவதையும்,ஒருசிறுவனிற்கு சிகிச்சை அளிக்கப்படுவதையும் நபர் ஒருவர் வீழ்ந்து கிடப்பதையும் காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

வான்குவான்சுவாங் சாலை மற்றும் வானலியு சாலைகள் சந்திக்கும் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆரம்பபாடசாலையொன்றிற்கு அருகிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.பாடசாலை வாயிலிற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாடசாலைக்குள்ளிருந்து வெளியே வந்து கொண்டிருந்த மாணவர்களை சந்தேகநபர் தாக்கியுள்ளார்.

மூன்று மாணவர்களும் பெற்றோர் ஒருவரும் மாணவரை காப்பாற்ற முயன்ற பேஸ்போல் பயிற்றுனரும் காயமடைந்துள்ளனர்.

மாணவர்கள் இரத்தக்காயங்களுடன் நிலத்தில் விழுவதை பார்த்ததும் பெரும் குழப்பநிலை நிலவியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் ஆரம்ப பாடசாலைகள் உட்பட பல பகுதிகளில் கடந்த சில வருடங்களாக கத்திக்குத்து தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உக்ரைன் குறித்த தனது இலக்குகளை அடையும்...

2024-12-11 07:41:22
news-image

2024 இல் 104 ஊடகவியலாளர்கள் படுகொலை...

2024-12-11 07:37:08
news-image

சிரியாவில் ஐஎஸ் அமைப்பு மீண்டும் தலைதூக்கலாம்...

2024-12-11 07:32:36
news-image

மாநிலங்களவை தலைவர்ஜக்தீப் தன்கருக்கு எதிராகஇந்திய எதிர்கட்சிகள்...

2024-12-10 16:40:24
news-image

யுத்தகுற்றவாளிகளை பொறுப்புக்கூறலிற்குட்படுத்துவோம் -சிரிய கிளர்ச்சி குழுவின்...

2024-12-10 15:20:22
news-image

சிரிய தலைநகரிலிருந்து 25 கிலோமீற்றர் தொலைவில்...

2024-12-10 14:25:17
news-image

ஹெய்ட்டியில் ஆயுதகுழுக்களால் 100க்கும் அதிகமானவர் படுகொலை...

2024-12-10 12:16:16
news-image

இந்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்:...

2024-12-10 10:59:26
news-image

மும்பையில் தாறுமாறாக ஓடிய மாநகரப் பேருந்து...

2024-12-10 10:17:37
news-image

அசாத்திற்கு புகலிடம் வழங்குவது என்பது புட்டினின்...

2024-12-09 16:22:53
news-image

டெல்லியில் 40 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்...

2024-12-09 16:23:30
news-image

தென்கொரிய ஜனாதிபதிக்கு பயணத்தடை -ஊழல் விசாரணை...

2024-12-09 12:38:11