பதுளை மாவட்டத்தில் ஒரு தமிழ் பிரதிநிதித்துவத்தையேனும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் - அருணாச்சலம் அரவிந்தகுமார்

Published By: Digital Desk 7

28 Oct, 2024 | 05:03 PM
image

பதுளை மாவட்டத்தில் பெரும்பான்மை வாக்காளர்கள் சுமார் ஆறு இலட்சம் பேர் காணப்படுகின்றனர். சிறுபான்மை வேட்பாளர்களாக ஒரு இலட்சம் பேரே  உள்ளனர். ஆகவே இந்த ஒரு இலட்சம் வாக்காளர்களே மேற்படி ஆறு இலட்சம் சிங்கள வாக்காளர்களுடன் முட்டி மோதி போட்டியிட வேண்டி இருக்கிறது. அப்படியானால் நூற்றுக்கணக்கான வேட்பாளர்கள் களமிறங்கி இருக்கின்ற நிலையில் தமிழ்  பிரதிநிதித்துவத்துக்கு கேள்வி ஒன்று எழுந்திருக்கிறது. அது மாத்திரமன்றி ஒருவிதமான அச்சமும் எழுந்திருக்கின்றது இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டுமானால் மக்கள் தீர்க்கமாக சிந்தித்து தமது வாக்குகளை மிகச் சரியான முறையில் பிரயோகிக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் பதுளை மாவட்ட முதன்மை வேட்டாளர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்தார்.

பூனாகலை தோட்டத்தின் எல்எல்ஜி பிரிவில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்தார்.

வேட்பாளர் அரவிந்தகுமார் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

பதுளை மாவட்டத்தில் ஒரு தமிழ் பிரதிநிதித்துவத்தையேனும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற காரணத் தேவையின் தீர்மானம் மக்களிடத்திலேயே இருக்கிறது. பதுளை மாவட்டத்தின் அனைத்து தோட்டங்களுக்கும் பிரதேசங்களுக்கும் சென்று வாக்கு கேட்கும் உரிமையும், தைரியமும் எனக்கு இருக்கிறது. 

ஏனெனில் நான் அனைத்து பிரதேசங்களையும் சமமாக பார்க்கின்றவனாக இருக்கிறேன். அனைத்து பிரதேசங்களினதும் தேவை அறிந்து செயல்பட்டவனாக காணப்படுகிறேன். 

பதுளை மாவட்டத்தின் தேவை உணர்ந்து மக்களின் அபிலாசைகளை  நிறைவேற்றி இருப்பது மகிழ்ச்சியே.அதனாலேயே மக்கள் என் மீது அன்பு கூர்ந்து முகம் மலர்ந்து என்னை வரவேற்கின்றனர். ஆனபோதிலும் இன்று அனைத்து தோட்டங்களுக்கும் பல்வேறு வேட்பாளர்கள் எமது மக்களை நாடி செல்கின்றனர்.

ஆனால் மக்கள் அவர்களை வரவேற்பதற்கு பதிலாக வாகனங்களில் இருந்து இறங்க விடாது அப்படியே திரும்பிச் செல்லுமாறு அனுப்பி வைக்கின்றனர்.  நம்பி வாக்களித்தோமே. மீண்டும் வாக்கு கேட்க வரும் நீங்கள் எமக்கு என்ன செய்தீர்கள் என்று கேள்வியெழுப்புகின்றனர்.

எமது மக்களின் இத்தகைய செயல்பாடானது  என் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையையும் எனக்கான ஆதரவையும் அதிகரித்திருக்கின்றது என்பதை உணர்த்தி நிற்கிறது.

மக்களின் ஆதரவை பெறுவதோ அல்லது அவர்களின் மனங்களில் இடம் பிடிப்பதோ இலகுவான காரியம் அல்ல. அது மிகவும் கடினமானது.  அப்படியானால் கடினமான செயற்பாடுகளை முன்னெடுத்து மக்களின் விருப்பங்களை அறிந்து செயல்பட்டதனால் இன்று அவர்களிடத்தில் ஒரு தனியான இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளேன் என்பதை பெருமையாக கூறிக் கொள்கிறேன்.

பாடசாலைகளாக இருக்கலாம் ஆலயங்களாக இருக்கலாம் ஏனைய நலன்புரி சேவைகளாக இருக்கலாம் அனைத்து வகையிலான சேவைகளிலும் எனது உயரிய பங்களிப்பு இருக்கிறது அவ்வாறு நிறைவேற்றப்பட்ட சேவைகளின் பங்காளியாக காணப்படுகிறேன். 

 நான் கல்வி இராஜாங்க அமைச்சராக பதவியில் இருந்த போது கல்வி அமைச்சிலே சுமார் 900 மில்லியன் ரூபா பெருமதியான 4,60,000 சீருடைப் பொதிகள் தேங்கிக் கிடந்தன.  இவற்றை எமது பிள்ளைகளுக்கு கொண்டு சேர்த்தால் என்ன என்ற நோக்கத்தின் அடிப்படையில் மலையகத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்ற 863 பாடசாலைகளை சேர்ந்த இரண்டு இலட்சத்து ஐயாயிரம் மாணவ சிறுவர்களுக்கு அதனை மேலதிகமாக பகிர்ந்தளிப்பதற்கு வழிவகை செய்திருந்தேன். 

 இது ஒரு வரலாற்று நிகழ்வாகும் இவ்வாறு இனியும் இடம் பெறாது. அதற்கான சாத்தியமும் கிடையாது.  இவ்வாறுதான் எனது சமூக உணர்வை நான் வெளிப்படுத்தி காட்டியிருக்கிறேன்.

பதுளை மாவட்டத்தில்  கணிதம் மற்றும் விஞ்ஞானம் ஆகிய படங்களுக்கான பட்டதாரி ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்த நிலைமையை உணர்ந்து நான் பதுளை மாவட்டத்தின் இரண்டு தேசிய பாடசாலைகளுக்கு அதாவது பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரி மற்றும் பசறை தமிழ் தேசிய கல்லூரி ஆகியவற்றுக்கு 11 பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்திருந்தேன். 

எனினும் துரதிர்ஷ்ட சமாக நான்கு பேரே இங்கு வருகை தந்தனர். ஏனையவர்கள் வடக்கு கிழக்கைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் இங்கு வரவில்லை.   எனினும் இதனை இவ்வாறே விட்டுவிட முடியாது. இங்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் அதற்கான கடமையும் பொறுப்பும் கடப்பாடும் எனக்கு இருக்கின்றது. அதனை நிச்சயம் நான் செய்வேன்.

 இம்முறை பாராளுமன்ற தேர்தல் களம் மிகவும் வித்தியாசமாக காணப்படுகிறது. பதுளை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.  இங்கு பெரும்பான்மை வாக்காளர்கள் சுமார் ஆறு இலட்சம் பேர் காணப்படுகின்றனர். அதேபோன்று சிறுபான்மை வேட்பாளர்களாக ஒரு இலட்சம் பேரே  உள்ளனர்.

ஆகவே இந்த ஒரு இலட்சம் வாக்காளர்களே மேற்படி ஆறு இலட்சம் சிங்கள வாக்காளர்களுடன் முட்டி மோதி போட்டியிட வேண்டி இருக்கிறது. அப்படியானால் நூற்றுக்கணக்கான வேட்பாளர்கள் களமிறங்கி இருக்கின்ற இந்நிலையில் தமிழ்  பிரதிநிதித்துவத்துக்கு கேள்வி ஒன்று எழுந்திருக்கிறது.

அது மாத்திரமன்றி ஒருவிதமான அச்சமும் எழுந்திருக்கின்றது இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டுமானால் எனது மக்கள் தீர்க்கமாக சிந்தித்து தமது வாக்குகளை மிகச் சரியான முறையில் பிரயோகிக்க வேண்டும்.  பதுளை மாவட்டத்தில் ஒரு தமிழ் பிரதிநிதித்துவத்தையேனும் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்  என்ற காரணத் தேவையின் தீர்மானம் மக்களிடத்திலேயே இருக்கிறது என மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுத்துறை தேவாலயத்தில் பெறுமதியான சிலைகள் திருட்டு...

2025-01-22 12:36:59
news-image

இலங்கையில் சமத்துவம், உண்மை, நீதிக்கான முயற்சிகளை...

2025-01-22 12:18:15
news-image

உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் ஐவர் கைது

2025-01-22 12:11:13
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நால்வர்...

2025-01-22 11:43:15
news-image

வடக்கில் கடந்த வருடம் 34 படுகொலைகள்...

2025-01-22 11:46:04
news-image

ரயில் மோதி நபரொருவர் காயம்!

2025-01-22 12:01:49
news-image

யாழில் காய்ச்சலால் 4 வயது சிறுமி...

2025-01-22 11:08:55
news-image

தேங்காய் தட்டுப்பாடு ; அரசாங்க தலையீட்டை...

2025-01-22 12:10:23
news-image

நாட்டை கட்டியெழுப்ப விரும்பியோ விரும்பாமலோ சில...

2025-01-22 10:57:45
news-image

மின்சாரம் தாக்கி 14 வயதுடைய சிறுவன்...

2025-01-22 11:08:50
news-image

நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்...

2025-01-22 10:50:43
news-image

ஜா - எலயில் கஜமுத்துக்களுடன் இருவர்...

2025-01-22 10:43:18