முச்சக்கரவண்டி ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது

28 Oct, 2024 | 01:57 PM
image

கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியில் மாபோல பிரதேசத்தில் சட்டவிரோதமாக முச்சக்கரவண்டி ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 9 பேர் இன்று திங்கட்கிழமை (28) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வத்தளை பொலிஸார் தெரிவித்தனர். 

வத்தளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெல்லம்பிட்டி, தெமட்டகொடை, முகத்துவாரம் மற்றும் கெரவலப்பிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 18 முதல் 22 வயதுக்குட்பட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 9 முச்சக்கரவண்டிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபர்கள் நீண்ட நாட்களாக முச்சக்கரவண்டி ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பரிசோதனைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்கள் மது போதையில் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் வெலிசறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக வத்தளை  பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24
news-image

பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை...

2025-02-11 17:26:43
news-image

பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின்...

2025-02-11 17:25:53
news-image

வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க...

2025-02-11 16:20:05
news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14
news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06
news-image

முகத்துவாரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2025-02-11 18:38:34
news-image

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

2025-02-11 17:18:28
news-image

ஜப்பானிய காகித மடிப்புக் கலையை ஊக்குவிக்கும்...

2025-02-11 17:21:24
news-image

அரச சேவையில் 7,456 பதவி வெற்றிடங்கள்...

2025-02-11 17:22:36
news-image

தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுமாறு கோரி...

2025-02-11 17:04:54