வளர்ந்துவரும் அணிகளுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் ஏ அணி சம்பியனானது

Published By: Vishnu

27 Oct, 2024 | 11:55 PM
image

(நெவில் அன்தனி)

ஓமானில் நடைபெற்ற வளர்ந்துவரும் வீரர்களைக் கொண்ட அணிகளுக்கு இடையிலான ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் ஏ அணி சம்பியனானது.

இலங்கை ஏ அணிக்கு எதிராக இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் 11 பந்துகள் மீதம் இருக்க ஆப்கானிஸ்தான் ஏ அணி 7 விக்கெட்களால் இலகுவாக வெற்றியீட்டி சம்பயின் பட்டத்தை சுவீகரித்தது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை ஏ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை ஏ அணியின் முன்வரிசை வீரர்கள் நால்வர் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழக்க 5ஆவது ஓவரில் மொத்த எண்ணிக்கை வெறும் 15 ஓட்டங்களாக இருந்தது.

இதன் காரணமாக இலங்கை ஏ அணி பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

ஆனால், பவன் ரத்நாயக்க, சஹான் ஆராச்சிகே ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்து   அணியின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தினர்.

பவன் ரத்நாயக்க 20 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

தொடர்ந்து திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சஹான் ஆராச்சிகே 6ஆவது விக்கெட்டில் நிமேஷ் விமுக்தியுடன் மேலும் 42 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

நிமேஷ் விமுக்தி 23 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்ததும் மேலும் ஒரு விக்கெட் சரிந்தது. (108 - 7 விக்.)

சஹான் ஆராச்சிகே 64 ஓட்டங்களுடனும் துஷான் ஹேமன்த 6 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் மொத்த எண்ணிக்கையை 133 ஓட்டங்களாக உயர்த்தினர்.

பந்துவீச்சில் பிலால் சமி 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஏ.எம். கஸன்பர் 14 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் ஏ அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி சம்பியனானது.

ஆப்கானிஸ்தான் ஏ அணியின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. ஆரம்ப வீரர் ஸுபைத் அக்பாரி முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார், ஆனால், சிதிக்குல்லா அத்தல் 2ஆவது விக்கெட்டில் அணித் தலைவர் தார்விஷ் ரசூலியுடன் 43 ஓட்டங்களையும் 3ஆவது விக்கெட்டில் கரிம் ஜனத்துடன் 52 ஓட்டங்களையும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் மொஹமத் இஷாக்குடன் 39 ஓட்டங்களையும் பகிர்ந்து ஆப்கானிஸ்தான் ஏ அணியை சம்பியனாக்கினார்.

சிதிக்குல்லா அத்தல் ஆட்டம் இழக்காமல் 55 ஓட்டங்களைப் பெற்றதுடன் தார்விஷ் ரசூலி 24 ஓட்டங்களையும் கரிம் ஜனத் 33 ஓட்டங்களையும் மொஹமத் இஷாக் ஆட்டம் இழக்காமல் 16 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சஹான் ஆராச்சிகே, துஷான் ஹேமன்த, ஏஷான் மாலிங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: ஏ.எம். கஸான்பார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொழில்முறை வீரரருக்கான நெறிமுறையை மீறிய அல்ஸாரி...

2024-11-08 20:20:23
news-image

ஆஸி. மண்ணில் 7 வருடங்களின் பின்னர்...

2024-11-08 19:55:31
news-image

அணித்தலைவருடன் முறைத்துக்கொண்டு ஆட்டத்தின்நடுவே மைதானத்திலிருந்து வெளியேறிய...

2024-11-08 14:42:10
news-image

நெதர்லாந்து தலைநகரில் இஸ்ரேலிய கால்பந்தாட்ட ரசிகர்கள்...

2024-11-08 14:06:57
news-image

யாழ்ப்பாணம் கல்லூரிக்கு 3ஆம் இடம்

2024-11-07 13:27:48
news-image

பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிரான கிரிக்கெட்...

2024-11-07 12:46:58
news-image

நியூஸிலாந்துக்கு எதிரான இருவகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட...

2024-11-06 16:25:57
news-image

சகல பிரிவுகளிலும் கால் இறுதிகளில் நடப்பு...

2024-11-06 03:25:24
news-image

ஹொங் கொங் சிக்ஸஸ் கிரிக்கெட்டில் சம்பியனான...

2024-11-05 15:47:46
news-image

நியூஸிலாந்து அணியின் ஒரு தொகுதியினர் இலங்கை...

2024-11-05 15:22:23
news-image

மகளிர் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் வலுவான...

2024-11-04 21:33:19
news-image

பாகிஸ்தானை பிரமிக்கவைத்த பெட் கமின்ஸின் துடுப்பாட்டம்;...

2024-11-04 18:17:29