வவுனியாவில் காணாமற்போன உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று 70வது நாளை எட்டியுள்ளது. 

இதையடுத்து இன்று மதியம் 12.15 மணியளவில் கந்தசாமி ஆலயத்திற்குச் சென்று வழிபாடு மேற்கொண்ட பின்னர் தேங்காய் உடைத்து வழிபாடுகளை மேற்கொண்டனர் . 

கடந்த 70 நாட்களாக வவுனியாவில் சுழற்சி முறையில் போராட்டம் மேற்கொண்டு வரும் காணாமற்போன உறவுகள் தமது உறவகளின் வெளிப்படுத்தலை வலியுறுத்தியும், அரசியல் கைதிகளை விடுதலை செய், அவசரகாலச்சட்டத்தினை இரத்துச் செய் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தினை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.