புத்தளம் தேத்தாப்பளைப் பகுதியில் 49 வயதுடைய பெண்ணொருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறுதலாக வீழ்ந்து காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை (26) இரவு புத்தளம் கரம்பைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தேத்தாப்பளை பகுதியிலிருந்து கரம்பை விகாரைக்கு மோட்டார் சைக்கிளில் தாயும் மகனும் சென்று வழிபட்டு விட்டு மீண்டும் வீட்டுக்குத் திரும்பிச் சென்றபோது பின்னால் இருந்த தாய் தவறுதலாக வீழ்ந்துள்ளார்.
பின்னர் அவரது தாய் வீழ்ந்த இடத்திலிருந்து சுமார் 70 மீற்றர் தூரம் மோட்டார் சைக்கிளில் சென்ற பின்னரே தாய் மோட்டார் சைக்கிள் ஆசனத்தில் இல்லை என்பதை உணர்ந்து மோட்டார் சைக்கிளைத் திருப்பி தாயைத் தேடி சென்றுள்ளார்.
இதன்பின்னர் தாய் வீழ்ந்து காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் அங்கிருந்தவர்களினால் உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதன்போது வைத்தியசாலையில் வைத்து சிகிச்சைப் பலனின்றி குறித்த தாய் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் தேத்தாப்பளை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண்ணொருவரே குறித்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவரின் மகன் போக்குவரத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM