இலங்கையின் தேயிலை உற்பத்தி தொடர்பில் ஆய்வினை மேற்கொள்ளவதற்கு சீன நாட்டின் விவசாய பிரதி அமைச்சர் சென் க்ஷியவோஹுவா உள்ளிட்ட குழுவினர்  இன்று ஹட்டன் பிரதேச தேயிலை தொழிற்சாலைகளுக்கு விஜயமொன்றை மேற்கொண்டனர். 

மேற்படி விஜயம் பெருந்தோட்ட அபிவிருந்தி அமைச்சர் நவீன் திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.

இலங்கையில் தேயிலை உறப்பத்தி முறைமைகள் தொடர்பிலும் தேயிலை தூள் உற்பத்தி தொடர்பிலும் மேற்படி குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டனர். ஹட்டன் பிரதேசத்திற்கு வருகைத்தந்த மேற்படி குழுவினர் நுவரெலியா லபுக்கலை தேயிலை தொழிற்சாலை. மற்றும் தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்திற்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

சீன நாட்டு பிரதி அமைச்சர் குழுவினரின் விஜயத்தின் பின்  இரு நாடுகளுக்கிடையிலான தேயிலை உற்பத்தி முறைமையை நவீனமயப்படுத்தல் மற்றும் இலங்கை தேயிலையை சீன நாட்டுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்தார்.