வவுனியா ஈச்சங்குளம் பொலிஸாரால் பாரவூர்தியில் மறைத்து கடத்தப்பட இருந்த முதிரை மரக்குற்றிகள் இன்று (04) காலை 7.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
மடு காட்டுப்பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கடத்திச்செல்லப்பட இருந்த நிலையில் ஈச்சங்குள பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸ் பரிசோதகர் சுபாஷ் ஆரியரட்ன தலைமையில் உதவி பொலிஸ் பரிசோதகர் விஜயரத்ன , பொலிஸ் சாஜன் அமரசிங்க சமந்த,பொலிஸ் கான்ஷ்டபில்களான நிர்பான், விதான, சந்திரவம்ச, நிஷால், பிரதீப், கருணாரட்ன, கண்ணங்கர, பாரதிராஜா, பீரிஸ், மதுர, அஜந்தன் ஆகியோர் புதுக்குளம் பகுதியில் வைத்து பாரவூர்தியை வழி மறித்து சோதனையிட்ட போது சுமார் 10 லட்சம் பெறுமதி வாய்ந்த 29 முதிரை மரக்குற்றிகள் எருவிற்குள் மறைத்து கொண்டு செல்ல இருந்ததை கண்டறிந்துகொண்டனர்.
இதனையடுத்து பாரவூர்தியில் இருந்த ஜோன்ஜெராட் (வயது.37) , ராசரட்ணம் (வயது. 48) சாரதி உட்பட இருவரை கைது செய்துள்ள ஈச்சங்குளம் பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM