அபிநயக்ஷேத்ரா நடனப்பள்ளி, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்துடனும் திம்பிரிகஸ்யாய பிரதேச செயலகத்துடனும் இணைந்து நடாத்திய கலாசார நல்லிணக்க முகாம் எனும் 8 மணித்தியால பயிற்சிப் பட்டறை கடந்த 17ஆம் திகதி கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது.
“கலாசூரி” திவ்யா சுஜேனின் கலைத் திட்டமாக அமைந்த இந்த பயிற்சிப் பட்டறையில் இலங்கையின் மூன்று நடன வகைகளான பரதநாட்டியம், கூத்து, கண்டிய நடனம் ஆகியவை பயிற்சியளிக்கப்பட்டது.
கூத்துக் கலைஞர் பேராசிரியர் முனைவர் மௌனகுரு, கண்டியன் நடனக்கலைஞர் குரு முனைவர் வித்யாபதி ரவிபந்து ஆகியோருடன் இந்தியக் கலைஞர்களான தஞ்சை தமிழ் பல்கலைக்கழக நாடகத்துறை தலைவர் பேராசிரியர் முனைவர் செ. கற்பகம், ஸ்ரீ மாருதி கலையக அமைப்பாளர் மிருதங்க வித்துவான் மாயவரம் விஸ்வநாதன் ஆகியோரும் இணைந்து பயிற்சிகளை வழங்கினர்.
இந்திய உயர் ஸ்தானிகராலய சுவாமி விவேகானந்த கலாசார நிலையத்தின் கொழும்பு பணிப்பாளர் பேராசிரியர் முனைவர் அங்குரன் தத்தா பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர் பவானி முகுந்தன், திம்பிரிகஸ்யாய பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ஹன்சா ஹிமவந்தி, உலக இலங்கை பரதநாட்டியக் கலைஞர்கள் சங்க செயலாளர் நிறைஞ்சனா சுரேஷ்குமார் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டனர்.
கலைகளுக்கு இடையான ஒருங்கிணைவை அறிந்துகொள்ளவும், வேறுபட்ட நடன வகைகளில் காணப்படும் ஒற்றுமைகளையும் தனித்தன்மைகளையும் கண்டறியவும் கலைஞர்களுக்கு இடையே புரிந்துணர்வை மேம்படுத்துவதற்காகவும் இந்நிகழ்வு அமையப்பெற்றது.
(படப்பிடிப்பு - எஸ்.எம்.சுரேந்திரன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM