சமச்சீரற்ற இதயத் துடிப்பு பாதிப்பை துல்லியமாக அவதானிக்கும் நவீன கருவி

26 Oct, 2024 | 06:35 PM
image

எம்மில் சிலருக்கு இரவு நேரத்தில் உறங்கும் போது இதயத்துடிப்பு சீராக இல்லாமல் இயல்பான அளவைவிட  குறைவாக துடித்து இதய பாதிப்பை உண்டாக்கும்.

 வேறு சிலருக்கு விருந்துகளில் பங்கு பற்றும் போது உற்சாக மிகுதியாலோ அல்லது சோகத்தின் அளவு மிகுதியாலோ இதயத்துடிப்பு இயல்பான அளவை விட கூடுதலாக துடித்து இதய பாதிப்பை உண்டாக்கும்.  

இத்தகைய சமச் சீரற்ற இதயத் துடிப்பு பாதிப்பிற்கு சரியான தருணத்தில் முறையான சிகிச்சையை மேற்கொண்டால் இதயத்துடிப்பை சீராக்கலாம் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.  

மேலும் இத்தகைய தருணத்தில் நோயாளியின் சமச் சீரற்ற இதயத்துடிப்பு பாதிப்பை துல்லியமாக அவதானிக்க நவீன கருவிகளும், பரிசோதனை முறைகளும் அறிமுகமாகி இருப்பதாகவும் வைத்தியர்கள் தெரிவித்திருக்கிறார்கள். 

இதயத்துடிப்பு எப்போதும் இயல்பாக இருக்க வேண்டும். சிலருக்கு இதயத் துடிப்பில் பாதிப்பு ஏற்படும் போது அவை இயல்பான அளவைவிட மிகுதியாகவோ அல்லது குறைவாகவோ துடிக்கக்கூடும் .  

இவை பாதிப்பை ஏற்படுத்தும். மருத்துவ மொழியில் இதனை Supraventricular Tachycardia & Ventricular Tachycardia என வகைப்படுத்துவர். இதனை தற்போது கண்டறிய ஹோல்டர் டெஸ்ட் எனப்படும் பரிசோதனையை மேற்கொள்வார்கள்.  

இதன் போது நோயாளியின் மார்பகப் பகுதியில் பிரத்யேக கருவிகள் பொருத்தப்பட்டு, இதயத்துடிப்பு 24 மணி நேரமும் அவதானிக்கப்பட்டு பதிவு செய்யப்படும்.

பிறகு அந்த பதிவினை கணினி வழியாக வைத்தியர்கள் பார்வையிட்டு, எப்போது சமச் சீரற்ற இதயத்துடிப்பு பாதிப்பு ஏற்படுகிறது என்பதனை அவதானித்து, அதற்கேற்ற வகையில் சிகிச்சையை வழங்குவார்கள். 

தற்போது இந்த சிகிச்சை மேலும் நவீனப்படுத்தப்பட்டு கார்டியாக் பேட்ச் எனும் நவீன கருவி மூலம் மூன்று நாட்கள் - ஒரு வாரம் - மற்றும் இரண்டு வாரம் - என பிரத்யேகமாக இதயத் துடிப்பினை பதிவு செய்து , பாதிப்பினை துல்லியமாக அவதானிக்கலாம். 

பொதுவாக இத்தகைய சமச்சீரற்றஇதயத்துடிப்பு பாதிப்பு எம்முடைய இதய பகுதியில் இயங்கும் மின்னாற்றலில் உண்டாகும் தடையாகும். 

இதனை வைத்திய நிபுணர்கள் ஹோல்டர் டெஸ்ட் & கார்டியாக் பேட்ச் ஆகிய கருவிகள் மூலம் துல்லியமாக அவதானித்து, அதற்கு உரிய சிகிச்சையை மேற்கொண்டு இதயத் துடிப்பினை சீராக்குவார்கள்.

வைத்தியர் அருணாச்சலம் - தொகுப்பு அனுஷா 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதியோருக்கு ஏற்படும் குரல் மாற்ற பாதிப்புக்கான...

2024-11-11 17:49:14
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் எனும் நுரையீரல் பாதிப்பிற்குரிய...

2024-11-09 19:49:30
news-image

இரத்த நாளங்களில் ஏற்படும் அனியூரிஸம் பாதிப்பிற்குரிய...

2024-11-08 15:42:09
news-image

பாத வெடிப்பு பாதிப்பிற்குரிய நிவாரண சிகிச்சை

2024-11-06 17:34:15
news-image

முதுகு வலிக்கான நிவாரணம் தரும் அங்கியை...

2024-11-05 19:33:05
news-image

அக்யூட் ஃபிப்ரைல் இல்னஸ் எனும் கடுமையான...

2024-11-04 17:07:17
news-image

பெண்மணிகளுக்கு ஏற்படும் பைலோட்ஸ் கட்டி பாதிப்பிற்குரிய...

2024-11-02 14:12:41
news-image

விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் ஹெர்னியா பாதிப்புக்குரிய...

2024-11-01 18:42:51
news-image

மீடியல் டைபியல் ஸ்ட்ரெஸ் சிண்ட்ரோம் எனும்...

2024-10-30 15:54:33
news-image

கேங்க்லியன் நீர்க்கட்டி எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-10-29 16:09:36
news-image

ஒட்டோமைகோசிஸ் எனப்படும் காதில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2024-10-28 17:20:21
news-image

சமச்சீரற்ற இதயத் துடிப்பு பாதிப்பை துல்லியமாக...

2024-10-26 18:35:49