இன்றைய சூழலில் எம்மில் பலரும் நாளாந்தம் காலையில் கண் விழித்ததும் அவர்களின் முதல் எண்ணம் அன்றைய திகதியில் கிடைக்கும் வருமானத்தை பற்றியதாகத் தான் இருக்கும்.
மாத சம்பளம் வாங்குபவர்களாக இருந்தாலும் காலையில் எழுந்ததும் இன்று ஏதேனும் ஒரு வகையில் கூடுதலாக பணம் வந்து விடாதா..! என்ற ஏக்கம் இருக்கும். ஏனெனில் பணம் என்பது எம்மை பொறுத்தவரை அனைத்து விடயங்களுக்கும் மூல காரணமாக இருப்பவை.
பணம் இருந்து விட்டால் ... அல்லது பணம் என்பது நமக்கான தேவைகளுக்கு ஏற்ற அளவு இருந்தால் ... நாம் மகிழ்ச்சியுடன் இருப்போம். ஆனால் இந்த மகிழ்ச்சி அனைவருக்கும் கிடைப்பதில்லை. அதனால் தான் பணம் என்ற ஒன்றின் பின்னால் அனைத்து தரப்பு மக்களும் 24 மணி தியாலமும் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
வணிகர்கள்- சில்லறை வணிகர்கள்- பெரு வணிகர்கள்- என தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் ஏதேனும் பெரிய அளவில் லாபம் கிடைத்தால், அவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இருக்காது. அவர்கள் தாங்கள் மகிழ்ந்ததுடன் தங்களை நம்பி உழைத்துக் கொண்டிருப்பவர்களிடத்திலும் ஓரளவிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவார்கள்.
இதனால் எம்மில் பலரும் நாம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்றால் நாம் பணியாற்றும் நிறுவனத்தின் உரிமையாளர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என பிரார்த்திப்பதும் உண்டு. இவை எல்லாமே பணத்தை முன்னிறுத்தி நடைபெறும் சுழற்சி.
இந்த தருணத்தில் பணத்தை மட்டுமல்லாமல் எம்முடைய வாழ்க்கையில் வேலை வாய்ப்பு - திருமணம் - போன்ற சுப விடயங்கள் நடைபெற வேண்டும் என்றாலும் பணமும் தேவை. ஆண்டவனின் அருளும் தேவை.
இதனால் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் பணம் தடையின்றி சூட்சமமான முறையில் வந்து கொண்டிருக்க வேண்டும் என்றால் சில நூதனமான வழிமுறைகளை எளிமையாக கடைப்பிடிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் நாம் எம்முடைய குழந்தை பருவத்தில் விளையாடுவதற்காக பெற்றோர்களிடம் பொம்மைகளை கேட்டிருப்போம். அவர்களும் வாங்கி கொடுத்திருப்பார்கள். அந்த பொம்மைகள் எம்முடன் இருக்கும் காலகட்டத்தில் மகிழ்ச்சியாகவே இருந்திருப்போம்.
எனவே அதனை மீள நினைவு படுத்தும் வகையில் குறிப்பிட்ட பொம்மைகளை நாம் வாங்கி எம்முடன் வைத்திருந்தால் அதை நாளாந்தம் பார்த்துக் கொண்டிருந்தால் பணம் கிடைக்கும். மேலெழுந்த வாரியாக பார்க்கும் போது இது நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் இதன் பின்னணியில் சூட்சமம் அடங்கி இருக்கிறது என்பதனை எம்முடைய முன்னோர்கள் உணர்த்தி இருக்கிறார்கள்.
இதனால்தான் குழந்தை பருவத்திலேயே பொம்மைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். எனவே பன்னிரண்டு லக்னங்களில் பிறந்தவர்கள் எந்தெந்த பொம்மையை சந்தையில் வாங்கி வீட்டில் வைத்திருந்தாலும் அல்லது உங்களுடன் வைத்திருந்தாலும் பண பலன் கிடைக்கும் என்பதையும் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதனை கீழே தொடர்ந்து காண்போம்.
மேஷ லக்னத்தில் பிறந்தவர்கள் கருடன் பொம்மையை வாங்கி பாவிக்க வேண்டும். பொம்மை என்ற உடன் அதன் அளவு - வடிவம் - தயாரிப்பு - தரம்- தோற்றம்- வண்ணம் - இதைப்பற்றியெல்லாம் உங்களுடைய ஆரோக்கியத்திற்கு ஏற்ற வகையில் சிந்தித்து வாங்க வேண்டும்.
அதே தருணத்தில் கருடன் என்று சொன்னவுடன் பெருமாள் ஆலயத்தின் நுழைவு வாயிலில்... பெருமாள் சன்னதிக்கு எதிரே இருக்கும் கருடனை போன்று இருக்க வேண்டும். இந்த பொம்மையை நீங்கள் வாங்கி வைத்து நாளாந்தம் அதனை பார்த்து வாருங்கள். ஒரு வருட காலத்திற்குள் உங்களுடைய வங்கி இருப்பு உயர்வதையும், கடன் குறைவதையும், மகிழ்ச்சி பெருகுவதையும் அனுபவத்தில் காணலாம்.
ரிஷப லக்னத்தில் பிறந்தவர்கள் குதிரை பொம்மையை வாங்கி பாவிக்க வேண்டும். குதிரை பொம்மை என்றவுடன் அதன் வண்ணம்- உயரம்- எண்ணிக்கை- இவையெல்லாம் உங்களின் தெரிவு தான். குதிரை பொம்மையை வாங்கி பூஜை அறை - வரவேற்பறை என எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அதனை நாளாந்தம் உங்கள் பார்வையில் படும்படியும் உங்களுடன் இருக்கும்படியும் பார்த்துக் கொண்டால் போதுமானது. உங்களுக்கான தன வரவு தங்கு தடையின்றி வருவதை அனுபவத்தில் காணலாம்.
மிதுன லக்னத்தில் பிறந்தவர்கள் மான் பொம்மையை வாங்கி பாவிக்க வேண்டும். மான் என்ற உடன் அவை புள்ளிமானாக இருக்கலாம். கஸ்தூரி மானாக இருக்கலாம். ஆனால் அவை மானாக இருக்க வேண்டும் அவ்வளவு தான். அதன் தோற்றம் எப்படி இருந்தாலும் உங்களின் தெரிவு தான் பிரதானம்.
மான் பொம்மையை நீங்கள் நாளாந்தம் பார்த்து வரும்போது உங்களுடைய தன வரவு அதிகரிப்பதுடன் திருமண தடையும் அகன்று, இல்லறத்தில் இணையும் தருணம் கூடுவதையும் அனுபவத்தில் காணலாம்.
கடக லக்னத்தில் பிறந்தவர்கள் மயில் பொம்மையை வாங்கி பாவிக்க வேண்டும். மயில் என்ற உடன் ஆண் மயிலா? பெண் மயிலா.. ?தோகை விரித்து கொண்டிருக்க வேண்டுமா ?இல்லையா ?எந்த வண்ணத்தில் இருக்க வேண்டும்? என்ன அளவில் இருக்க வேண்டும் ?என்ன உயரத்தில் இருக்க வேண்டும் ? இவையெல்லாம் உங்களின் விருப்பப்படி பார்த்துக் கொள்ளு
ஆனால் மான் பொம்மையை நீங்கள் வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். நாளாந்தம் அதனை பார்வையிட்டு வாருங்கள். உங்களுக்கான தன வரவு அதிகரிப்பதுடன் அலுவலகத்திலும் , விற்பனை நிலையத்திலும் உங்களுடைய சொற்களுக்கு மதிப்பு உயர்வதையும் அனுபவத்தில் காணலாம்.
சிம்ம லக்னத்தில் நீங்கள் பிறந்திருந்தால் குதிரை பொம்மையை வாங்கி பாவிக்க வேண்டும். ரிஷப லக்னக்காரர்களுக்கு குறிப்பிட்டது போல் நீங்களும் உங்களுக்குப் பிடித்த வகையினதான குதிரை பொம்மையை வாங்கி நாளாந்தம் பார்வையிட்டு வாருங்கள்.
எம்மில் சிலர் பொம்மையை நீங்கள் குறிப்பிட்டது போல் வாங்கி விட்டோம். ஆனால் அதனை எப்படி பராமரிப்பது? என்று தெரியவில்லை எனக் கேட்டால்... பொம்மை வாங்கியவர்களிடமே அதனை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதையும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். பொம்மை அழகாகவும் , நேர்த்தியாகவும் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் கன்னி லக்னத்தில் பிறந்திருந்தால் கருடன் பொம்மையை வாங்கி பாவிக்க வேண்டும். கருடன் பொம்மை குறித்து மேலே குறிப்பிடப்பட்ட விடயங்களை மனதில் நினைத்துக் கொண்டு அந்த பொம்மையை ஆராதிக்க வேண்டும். இதனால் உங்களுடைய தன வரவு அதிகரிப்பதுடன் திருமணம் சார்ந்த விடயங்களில் நீங்கள் எடுக்கும் முடிவு உங்களுக்கு சாதகமானதாகவும் இருக்கும். இதனை அனுபவத்தில் காணலாம்.
நீங்கள் துலாம் லக்னத்தில் பிறந்திருந்தால் அன்னப்பறவை பொம்மையை வாங்கி பாவிக்க வேண்டும். தற்போது சந்தையில் இத்தகைய அன்னப்பறவை பொம்மை அரிதாக தான் கிடைக்கிறது இருந்தாலும் உங்களுடைய தேடல் தொடர்ந்தும் தீவிரமாகவும் இருந்தால் இது தொடர்பான விவரங்கள் உங்களை விரைவில் வந்தடையும்.
அன்னப்பறவை பொம்மை எப்போதும் வெண்மை வண்ணம் கொண்டதாகத் தான் இருக்கும். அதனால் இதனை நாளாந்தம் தூய்மையாக பராமரித்து வந்தால் உங்களுக்கான பணம் தொடர்பான சுப பலன்கள் அதிகரிப்பதை அனுபவத்தில் காணலாம்.
நீங்கள் விருச்சிக லக்னத்தில் பிறந்திருந்தால் யானை பொம்மையை வாங்கி பாவிக்க வேண்டும். யானை பொம்மை என்றவுடன் பலரும் அதன் தோற்றம் குறித்து வினா எழுப்புவர். யானை பொம்மை ஆசீர்வாதம் செய்வது போல் தும்பிக்கையை தூக்கி வைத்திருக்கும் நிலையிலான பொம்மையை வாங்குவது உத்தமமானது.
இந்த யானை பொம்மையும் அது ஆசிய யானையாக இருக்கலாம் அல்லது ஆப்பிரிக்க யானையாகவும் இருக்கலாம். ஆனால் அவை ஆசீர்வாதம் வழங்கும் யானையாக இருக்க வேண்டும் என்பதுதான் பிரதானம். இத்தகைய பொம்மையை நீங்கள் வீட்டில் வைத்திருக்கும் போது உங்களது வீட்டில் குடும்ப உறுப்பினர்களிடையே மகிழ்ச்சி அதிகரிப்பதுடன் அவர்களுக்கு இடையேயான உறவு சுமூகமாக இருக்கும்.
ஏனெனில் இத்தகைய பொம்மை உங்களது வீட்டில் இருந்தால் யாரிடம் எத்தகைய அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என்ற சூட்சமம் உங்களுக்கு தெளிவாக தெரிய வரும். இதுவே உங்களுக்கு தன வரவையும், தடைகளை அகற்றும் நிலையையும் உருவாக்கி சுப பலன்களை அள்ளித் தரும்.
தனுசு லக்னத்தில் நீங்கள் பிறந்திருந்தால் காகம் பொம்மையை நீங்கள் வாங்கி பாவிக்க வேண்டும். உடனே என் மேல் சிலர் நாங்கள் தான் நாளாந்தம் எங்கள் வீட்டிற்கு வருகை தரும் காகத்திற்கு உணவிடுகிறோமே..! எனக் கேட்பர். காகத்திற்கு உணவிடுவது உங்களின் முன்னோர்களின் ஆசியை பரிபூரணமாக பெறுவதற்கு.. அது ஒரு சிறந்த உபாயம்.
ஆனால் காகம் பொம்மையை நீங்கள் வீட்டில் வைத்திருக்கும் போது உங்களுக்கு தன வரவு அதிகரிக்கும். திருமண தடை அகலும். உங்களுடைய வாக்கு பலிதமாகும். அதாவது நீங்கள் சொல்வதை உங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் மறுக்காமல் கேட்பர்.
மகர லக்னத்தில் நீங்கள் பிறந்திருந்தால் நீங்களும் காகம் பொம்மையை வாங்கி பாவிக்க வேண்டும். காகம் பொம்மையை நீங்கள் நாளாந்தம் பார்த்து வரும்போது உங்களுக்கான தன வரவு தடையில்லாமல் கிடைப்பதை அனுபவத்தில் காணலாம்.
கும்ப லக்னத்தில் நீங்கள் பிறந்திருந்தால் யானை பொம்மையை வாங்கி பாவிக்க வேண்டும். மேலே குறிப்பிட்டபடி நீங்களும் யானை பொம்மையை வாங்கி நாளாந்தம் பார்வையிட்டு வந்தால் பணவரவு அதிகரிப்பதை காணலாம்.
மீனம் லக்னத்தில் நீங்கள் பிறந்திருந்தால் அன்னப்பறவை பொம்மையை வாங்கி பாவிக்க வேண்டும். இந்த பொம்மையையும் நாளாந்தம் நீங்கள் பார்வையிட்டு அல்லது நீங்கள் எங்கு சென்றாலும் அதாவது நான்கு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போது உங்களுடன் அன்னப்பறவை பொம்மையை உடன் எடுத்துச் சென்றால் அந்தப் பயணம் இனியதாகவும், லாபம் தரக்கூடியதாகவும் அமையும்.
மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு லக்னக் காரர்களும் தங்களுக்கான பொம்மையை வாங்கி பாவிக்க தொடங்குங்கள். ஓராண்டிற்குள் உங்களது தற்போதைய நிலையில் இருந்து உயர்வடைவதற்கான மாற்றங்கள் ஏற்படும். இதனை சூட்சமமாக அவதானித்து அதில் தொடர்ந்து பயணித்தால் செல்வந்தர் ஆகலாம் . இல்வாழ்க்கையில் வெல்லலாம். உங்களது வாக்கு மற்றும் செல்வாக்கு உயர்வதையும் காணலாம்.
தகவல்: மகேஷ் - தொகுப்பு : சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM