இயக்குநரும் , நடிகருமான கஸ்தூரிராஜா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஹபீபி 'எனும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை தமிழ் திரையுலகின் முத்திரை பதித்த ஆளுமைகளான இயக்குநர்கள் சேரன், தங்கர் பச்சான் , வெங்கட் பிரபு , சீனு ராமசாமி , பாண்டிராஜ் , பா. ரஞ்சித் , கார்த்திக் சுப்புராஜ் , மாரி செல்வராஜ், விக்னேஷ் சிவன் , லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி , லீனா மணிமேகலை , நடிகைகள் மஞ்சு வாரியர் மற்றும் மீரா ஜாஸ்மின் ஆகியோர் இணைந்து அவர்களது இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.
இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஹபீபி 'எனும் திரைப்படத்தில் கஸ்தூரிராஜா, ஈஷா , மாளவிகா மனோஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்.
இஸ்லாமிய குடும்பத்தினரின் வாழ்வியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை நேசம் எண்டர்டெய்ன்மென்ட் பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இந்த திரைப்படத்தை வி ஹவுஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வழங்குகிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கில் இஸ்லாமிய மதத்தை கடுமையாக பின்பற்றும் ஒரு குடும்பத்தினரின் மகிழ்ச்சி ததும்பிய புகைப்படம் இடம் பிடித்திருக்கிறது.
மேலும் 'ஹபீபி ' என்றால் அரபு மொழியில் அன்பை குறிக்கும் சொல் என்பதால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM