(நெவில் அன்தனி)
இந்தியாவுக்கு எதிராக பூனே, மஹாராஷ்டிரா கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சுழல்பந்துவீச்சாளர் மிச்செல் சென்ட்னர் 13 விக்கெட்களைக் கைப்பற்றியதன் பலனாக நியூஸிலாந்து 113 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
மூன்று நாட்களுக்குள் முடிவுக்கு வந்த இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றியீட்டியதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை ஒரு போட்டி மீதம் இருக்க இப்போதைக்கு 2 - 0 என நியூஸிலாந்து தனதாக்கிக்கொண்டது.
இதன் மூலம் இந்திய மண்ணில் முதல் தடவையாக நியூஸிலாந்து டெஸ்ட் தொடர் வெற்றியை ஈட்டி வரலாறு படைத்தது. இந்தியா தனது சொந்த மண்ணில் கடந்த 12 வருடங்களில் முதல் தடவையாக டெஸ்ட் தொடர் ஒன்றில் தோல்வியைத் தழுவியது.
இந்தியாவுக்கு முதன் முதலில் 1956ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் விஜயம் செய்த நியூஸிலாந்து அங்கு தனது 13ஆவது விஜயத்திலேயே முதல் தடவையாக தொடரை வெற்றி கொண்டுள்ளது.
10 தொடர்களில் இந்தியா வெற்றிபெற்றதுடன் இரண்டு தொடர்கள் சம நிலையில் முடிவடைந்தது.
இதற்கு முன்னர் 28 டெஸ்ட் போட்டிகளில் ஓர் இன்னிங்ஸில் 3 விக்கெட் களுக்கு மேல் எடுக்காமல் இருந்த மிச்செல் சென்ட்னர்,
இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்களையும் கைபற்றி இன்னிங்ஸ் ஒன்றில் அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியையும் (53 - 7 விக்.) போட்டிக்கான அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியையும் (157 - 13 விக்.) பதிவு செய்தார்.
இந்திய மண்ணில் வெளிநாட்டு பந்துவீச்சாளர்களால் டெஸ்ட் போட்டிகளில் பதிவுசெய்யப்பட்ட அதிசிந்த பந்துவீச்சுப் பெறுதிகளில் மிச்செல் சென்ட்னரின் பந்துவீச்சுப் பெறுதி 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
தனது சொந்த மண்ணில் சுழல்பந்துவீச்சாளர்களை இலகுவாக எதிர்கொள்ளும் ஆற்றல் மிக்க இந்திய துடுப்பாட்ட வீரர்கள் மிச்செல் சென்ட்னரின் சுழற்சியில் விக்கெட்ளைத் தாரைவார்த்தனர்.
சென்ட்னருக்கு பக்க பலமாக க்ளென் பிலிப்ஸ், அஜாஸ் பட்டேல், மெட் ஹென்றி ஆகிய சுழல்பந்துவீச்சாளர்களும் திறமையாக பந்துவீசி விக்கெட்களைக் கைப்பற்றினர்.
முற்று முழுதாக சுழல்பந்துவீச்சாளரகள் ஆதிக்கம் செலுத்திய இந்தப் போட்டியில் வீழ்த்தப்பட்ட 40 விக்கெட்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் வேகப்பந்துவீச்சாளர் டிம் சௌதீ கைப்பற்றினார்.
இந்திய அணியில் வொஷிங்டன் சுந்தர் 11 விக்கெட்களையும் ரவிச்சந்திரன் அஷ்வின் 5 விக்கெட்களையும் ரவிந்த்ர ஜடேஜா 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். நியூஸிலாந்தின் ஒரு வீரர் ரன் அவுட் ஆனார்.
நான்கு இன்னிங்ஸ்களிலும் நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் பெற்ற 259 ஓட்டங்களே ஓர் இன்னிங்ஸில் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாக இருந்தது.
கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இப் போட்டி மூன்றாம் நாளான இன்றைய தேநீர் இடைவேளைக்குப் பின்னர் முடிவுக்கு வந்தது.
எண்ணிக்கை சுருக்கம்
நியூஸிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 259 (டெவன் கொன்வே 76, ரச்சின் ரவிந்த்ரா 65, மிச்செல் சென்ட்னர் 33, வொஷிங்டன் சுந்தர் 59 - 7 விக்., ரவிச்சந்திரன் அஷ்வின் 64 - 3 விக்.)
இந்தியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 156 (ரவிந்த்ர ஜடேஜா 33, யஷஸ்வி ஜய்ஸ்வால் 30, ஷுப்மான் கில் 30, மிச்செல் சென்ட்னர் 53 - 7 விக்., க்ளென் பிலிப்ஸ் 26 - 2 விக்.)
நியூஸிலாந்து 2ஆவது இன்: 255 (டொம் லெதம் 86, க்ளென் பிலிப்ஸ் 48, டொம் ப்ளன்டல் 41, வொஷிங்டன் சுந்தர் 56 - 4 விக்., ரவிந்த்ர ஜடேஜா 72 - 3 விக்., ரவிச்சந்த்ரன் அஷ்வின் 97 - 2 விக்.)
இந்தியா - வெற்றி இலக்கு 359 - 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 245 (யஷஸ்வி ஜய்ஸ்வால் 77, ரவீந்த்ர ஜடேஜா 42, வொஷிங்டன் சுந்தர் 21, மிச்செல் சென்ட்னர் 104 - 6 விக்., அஜாஸ் பட்டேல் 43 - 2 விக்.)
ஆட்டநாயகன்: மிச்செல் சென்ட்னர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM