குளியாப்பிட்டி - மாதம்பே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று முன்னால் சென்ற ட்ரக் வண்டியை முந்தி செல்ல முற்பட்ட போது எதிர் திசையில் வந்த  மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர் துனுகந்தெனிய வெலிபன்னகஹமுல்ல பகுதியைச் சேர்ந்த 35 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்தவர் படுகயாங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.