பல கண்டங்களில் சமாதான மாநாட்டு அலை வீசுகின்றன. சர்வதேச சமாதான அமைப்பாக இயங்கிவரும் HWPL (பரலோக கலாசாரம், உலக சமாதானம், ஒளியின் மறுசீரமைப்பு) உலக சமாதானத்தை முன்னேற்றுவதற்காக பல்வேறு துறைகளைச் சேர்ந்த தலைவர்களை ஒன்றுகூட்டியுள்ளது.
HWPLஇன் 10வது ஆண்டு உலக சமாதான உச்சிமாநாடு கடந்த செப்டம்பர் 28ஆம் திகதி இந்தியாவின் புதுடெல்லியில் இந்திய சர்வதேச சட்ட சங்கத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வு இந்தியாவில் HWPLஇன் சாதனைகளைக் கொண்டாடிய முக்கிய மத மற்றும் குடியுரிமை தலைவர்கள் உட்பட 236 பங்கேற்பாளர்களை ஒன்றிணைத்தது.
எதிர்கால சமாதான நடவடிக்கைகளுக்கான நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு, சமாதான கல்வி பாடத்திட்டங்களை வழங்குவதன் மூலம் இந்த நிகழ்வு நிறைவடைந்தது.
அதே நாளில் சிகாகோவில் 10வது ஆண்டு விழா ஹாம்ப்டன் ஹோட்டலில் நடைபெற்றது.
சபீர் ஓமர் முஹம்மது மற்றும் போதகர் ஆபிரகாம் ஓலானியன் போன்ற முக்கிய நபர்கள் உள்ளடங்கலாக 40 பங்கேற்பாளர்களுடன் இவ்விழா கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வின் கவனம் சிகாகோ பகுதியில் சமாதான முயற்சிகளுக்கு புத்துயிர் அளித்தது. உள்ளூர் சமாதான திட்டங்களில் அதிக பங்கேற்பை வளர்ப்பது மற்றும் பிராந்தியத்தில் எதிர்கால வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைப்பதாக இருந்தது.
ஆபிரிக்காவில் சியரா லியோன் இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்த தேஜன் கெல்லா போன்ற குறிப்பிடத்தக்க பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய ஒரு உரையாடலுக்காக தலைவர்கள் கடந்த செப்டம்பர் 25ஆம் திகதி ஒன்லைனில் ஒன்றுகூடினர்.
இந்த கூட்டம் கண்டம் முழுவதும் சமாதானத்தை தக்கவைப்பதற்கான ஆளுகை மற்றும் சிவில் சமூகத்துக்கு இடையிலான கூட்டு முயற்சிகளை எடுத்துரைத்தது.
தேசிய ஒற்றுமை மற்றும் மோதலுக்குப் பிந்தைய நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.
இலங்கை தனது சொந்த சமாதான நிகழ்வை கடந்த செப்டம்பர் 28ஆம் திகதி கொழும்பில் உள்ள இலங்கை இளைஞர் நாடாளுமன்றத்தில் நடத்தியது.
டாக்டர் ஸ்வர்ண விஜேவர்தன மற்றும் போதகர் சுகந்தன் உட்பட மதத் தலைவர்கள், இளைஞர்கள், தலைவர்கள் தேசிய நல்லிணக்கம் மற்றும் இனப் பதற்றங்களை நிவர்த்தி செய்வதற்கும் நாட்டுக்குள் ஒற்றுமையை வளர்ப்பதற்கும் HWPLஇன் சமாதான மாதிரியை பயன்படுத்துவது குறித்து கலந்துரையாடினர்.
முன்னோக்கிப் பார்க்கையில், கொரியா கடந்த ஒக்டோபர் 12ஆம் திகதி நாக்டோங் நதி வெற்றி ஞாபகார்த்த மண்டபத்தில் ஒரு சமாதான மாநாட்டை நடத்தியது.
எச்.டபிள்யூ.பி.எல்.,இன் டேகு கியோங்புக் டோங்ஹேங் பிரசார ஊக்குவிப்புக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு HWPLஇன் உலகளாவிய சமாதான முயற்சிகளால் உருவாக்கப்பட்ட உத்வேகத்தின் மீது இளைஞர்களின் ஈடுபாடு மற்றும் சமாதான கல்வியில் கவனம் செலுத்தும்.
இந்த நிகழ்வுகள் ஒட்டுமொத்தமாக HWPLஇன் சமாதான இயக்கத்தின் உலகளாவிய தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. இது மோதலை சமாளிப்பதற்கும் கல்வி, உரையாடல் மற்றும் கூட்டுறவுத் திட்டங்கள் மூலம் ஒற்றுமையை வளர்ப்பதற்கும் பல்வேறு பிராந்தியங்களின் உறுதிப்பாட்டை காட்டுகிறது.
கண்டங்கள் முழுவதும் உள்ள தலைவர்கள் சமாதானத்துக்காக கைகோர்த்துக்கொண்டால், அவர்கள் எல்லைகள், கலாசாரங்கள் மற்றும் சமூகங்களிடையே நீடிக்கும் சமாதானத்தை பற்றி பகிரப்பட்ட பார்வையை பிரதிபலிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM