தம்­மு­டைய சகோ­தர வீரர்­களின் அர்ப்­ப­ணிப்பு மற்றும் தாம் வழங்கும் அறி­வு­றுத்­தல்­களை சரி­வர பின்­பற்­றலே எந்­த­வொரு தலை­வ­னது வெற்­றிக்கும் கார­ண­மாக அமை­யு­மென இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலை­வரும்  அமைச்­ச­ரு­மான அர்­ஜுன ரண­துங்க தெரி­வித்தார்.

இந்­தி­யாவில் நடை­பெற்ற விசேட கௌர­விப்பு நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அமைச்சர் இக்­க­ருத்தை வெளி­யிட்டார். 

ஐ.பி.எல். தொடரின் போது ஹைத­ராபாத் கிரிக்கெட் சங்­கத்­தினால் ஏற்­பாடு செய்­யப்­பட்ட இக்­கௌ­ர­விப்பு நிகழ்வு ராஜிவ் காந்தி சர்­வ­தேச விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெற்­றது. 

1996ஆம் ஆண்டு இலங்­கைக்கு உலகக் கிண்­ணத்தை வென்று கொடுக்கும் பொருட்டு அர்­ஜுன ரண­துங்க வழங்­கிய தலை­மைத்­துவம் மற்றும் கிரிக்கெட் விளை­யாட்டின் பொருட்டு ஆற்­றிய சேவையை பாராட்டும் முக­மா­கவே இக்­கௌ­ர­விப்பு நிகழ்வு ஏற்­பாடு செய்­யப்­பட்­டது. 

இக்­கௌ­ர­விப்பு நிகழ்வில் ஹைத­ராபாத் கிரிக்கெட் சங்­கத்தின் தலை­வரும் முன்னாள் பாரா­ளு­ மன்ற உறுப்­பி­ன­ரு­மான ஜி.விவே­கானந் உட்­பட பலர் கலந்­து­கொண்­டார்கள். 

இந்­நி­கழ்வில் மேலும் பேசிய ரண­துங்க,  முன்­னர் இருந்த வீரர்கள் பணத்தை காட்­டிலும் நாட்டை பற்­றியே சிந்­தித்­தார்­க­ள் என தெரி­வித்தார்.

என்­னு­டைய தலை­மைத்­து­வத்தின் கீழ் விளை­யா­டிய அனைத்து வீரர்­களும் எப்­பொ­ழுதும் என்­னு­டைய அறி­ வு­றுத்­தல்­க­ளையே பின்­பற்­றி ­னார்கள். அன்­றி­ருந்த 13 வீரர்­களும் பணத்தை பற்றி சிந்­திக்­காது மிகவும் அர்­ப்ப­ணிப்­புடன் நாட்­டிற்காக விளை­யா­டி­னார்கள்.

இவ்வாறான 13 வீரர்கள் கிடைக்கப் பெற்றமையை என்னுடைய அதிர்ஷ்டமாகவே கருதுகிறேன் என அர்ஜூன மேலும் குறிப்பிட்டார்.