(நா.தனுஜா)
தொழிற்சங்கங்களுடனான தமது உறவை அரசாங்கம் முறையாகக் கையாளாதுவிடின், அத்தொழிற்சங்கங்களால் வழங்கப்படும் அழுத்தம் பொருளாதார மறுசீரமைப்புக்களையும், வளர்ச்சியையும் அடைவதற்கு மிகமுக்கிய தடையாக மாறக்கூடும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் முன்னாள் அமைச்சர் அலி சப்ரி, தற்போதைய அரசாங்கம் எதிரணியில் இருந்தபோது தொழிற்சங்கங்களின் ஆதரவினால் பெரும் பயனடைந்திருக்கிறது.
இருப்பினும் தற்போது அவர்கள் ஆட்சியில் இருக்கும்போது இந்தத் தொடர்பை மீள்வடிவமைத்து, உரியவாறு கையாளவேண்டிய கட்டாயத்தேவை ஏற்பட்டிருக்கிறது என அப்பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை இதனை முறையாகக் கையாளாதுவிடின், தொழிற்சங்கங்களினால் வழங்கப்படும் அழுத்தமானது நாட்டில் பொருளாதார மறுசீரமைப்புக்களையும், வளர்ச்சியையும் அடைவதற்கு மிகமுக்கிய தடையாக மாறக்கூடும் எனவும் அலி சப்ரி எச்சரித்துள்ளார்.
ஆகவே தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கமும், தொழிற்சங்களும் நிலைமாற்றமடைந்திருக்கும் அவற்றின் வகிபாகங்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பில் மிகையான புரிந்துணர்வுடன் செயற்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM