தொழிற்சங்கங்களுடனான உறவை அரசாங்கம் முறையாக கையாளாதுவிடின் பொருளாதார மறுசீரமைப்புக்கள் பாதிப்படையும் - அலி சப்ரி

Published By: Vishnu

25 Oct, 2024 | 07:40 PM
image

(நா.தனுஜா)

தொழிற்சங்கங்களுடனான தமது உறவை அரசாங்கம் முறையாகக் கையாளாதுவிடின், அத்தொழிற்சங்கங்களால் வழங்கப்படும் அழுத்தம் பொருளாதார மறுசீரமைப்புக்களையும், வளர்ச்சியையும் அடைவதற்கு மிகமுக்கிய தடையாக மாறக்கூடும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் முன்னாள் அமைச்சர் அலி சப்ரி, தற்போதைய அரசாங்கம் எதிரணியில் இருந்தபோது தொழிற்சங்கங்களின் ஆதரவினால் பெரும் பயனடைந்திருக்கிறது. இருப்பினும் தற்போது அவர்கள் ஆட்சியில் இருக்கும்போது இந்தத் தொடர்பை மீள்வடிவமைத்து, உரியவாறு கையாளவேண்டிய கட்டாயத்தேவை ஏற்பட்டிருக்கிறது என அப்பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை இதனை முறையாகக் கையாளாதுவிடின், தொழிற்சங்கங்களினால் வழங்கப்படும் அழுத்தமானது நாட்டில் பொருளாதார மறுசீரமைப்புக்களையும், வளர்ச்சியையும் அடைவதற்கு மிகமுக்கிய தடையாக மாறக்கூடும் எனவும் அலி சப்ரி எச்சரித்துள்ளார்.

ஆகவே தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கமும், தொழிற்சங்களும் நிலைமாற்றமடைந்திருக்கும் அவற்றின் வகிபாகங்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பில் மிகையான புரிந்துணர்வுடன் செயற்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசின் பொதுச் சேவை வழங்கல்களை வினைத்திறன்...

2026-05-09 20:58:51
news-image

கபில சந்திரசேனவின் பிரேத பரிசோதனை அறிக்கை...

2026-05-09 20:55:37
news-image

யாழ் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சிய...

2026-05-09 20:56:13
news-image

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையை அரசாங்கம் திட்டமிட்டு...

2026-05-09 19:05:16
news-image

பெலவத்தை உத்தரவுக்கமையவே என்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது...

2026-05-09 18:40:18
news-image

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் :...

2026-05-09 18:41:54
news-image

இளம் குடும்பஸ்தர் கடத்தித் தாக்கப்பட்டு 3...

2026-05-09 20:18:52
news-image

அரசியல் பழிவாங்கல்களுக்காக அரச பொறிமுறை கீழ்த்தரமான...

2026-05-09 17:05:37
news-image

ஹட்டன் வெலிஓயாவில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

2026-05-09 21:00:11
news-image

பிரதமருக்கும் வியட்நாம் ஜனாதிபதிக்கும் இடையில் இருதரப்பு...

2026-05-09 20:25:44
news-image

இலங்கை - வியட்நாம் இடையில் வர்த்தக,...

2026-05-09 21:02:23
news-image

மரியா காஸ்டிலோ - அருண் ஹேமச்சந்திர...

2026-05-09 20:47:28