மயிலாடுதுறையில் தருமபுர ஆதீனத்தை தொடங்கிய சன்னிதானம் குருஞான சம்பந்தரின் ஜனன நட்சத்திரமான இன்று (25) மடத்தின் மணிவிழா ஆண்டாக இவ்வருடம் ஆதீனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மயிலாடுதுறை தர்மபுரத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒரு கிராம் நிறையுள்ள தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. 60 ஆயிரம் மரங்கள் நடப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் ஒரு நூல் வெளியிடப்படுவது குறித்து மகிழ்வடைவதாக இந்துக் குருமார் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்துக்குருமார் அமைப்பின் தலைவர் 'சிவாகம கலாநிதி' சிவஸ்ரீ.கு.வை.க.வைத்தீஸ்வர குருக்கள் மற்றும் அமைப்பின் செயலாளர் சிவஸ்ரீ.ச. சாந்தரூப குருக்கள் ஆகியோர் இது தொடர்பாக மேலும் கூறுகையில்,
தருமபுர ஆதீனம் அல்லது தருமை ஆதீனம் என்பது சைவ மடங்களுள் ஒன்றாகும். இந்த மடம் குருஞான சம்பந்தரால் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் மயிலாடுதுறையில் இம்மடம் அமைந்துள்ளது. சுமார் 27 மிகப் பெரும் சிவாலயங்கள் மடத்தினுடைய கட்டுப்பாட்டின் கீழ் காணப்படுகிறது.
இவ்வாதீனம் சமயம் சார்ந்த பணிகளோடு, மயிலாடுதுறையில் மகப்பேறு நிலையம் அமைத்தும், சிங்கிப்பட்டி காசநோய் மருத்துவமனை, அடையார் புற்றுநோய் வைத்தியசாலை போன்ற பொது நிறுவனங்களுக்குப் பெருந்தொகை வழங்கியும், ஏழை மாணவர்களுக்கு கல்வி கற்க கட்டண உதவி புரிந்தும் சமூகப் பணிகளில் ஈடுபட்டும் வருகிறது.
“ஞானசம்பந்தம்” என்ற திங்கள் இதழையும் இந்த மடம் வெளியிடுகிறது.
இவ்வாறு சமயப்பணியுடன் சமூகம் சார்ந்த நற்பணிகள், பல்வேறு வகைகளில் முன்னெடுக்கப்படுகின்றன.

திருமுறை கண்ட குருமணிகள் என போற்றி அழைக்கப்படும் 27ஆவது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் வழிகாட்டல் காலப்பகுதியில் சமயப்பணி மிக வேகமாக ஆர்வமாக முன்னெடுக்கப்படுகின்றமை திருவருளே.
மேலும், திருவருளுடன் சன்னிதானம் அவர்களின் திருவுளப்பாங்கின் வண்ணம் இறைபணியில் உள்ள சிவாச்சாரியார்கள், திருமுறை ஓதுவா மூர்த்திகள், மங்கலவாத்ய கலைஞர்கள் என பல்வேறு வகையில் கௌரவிக்கப்பட்டு வருகிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது.

"சிவாகம கலாநிதி" எனும் சிறப்புப் பட்டத்துடன் கௌரவம், பொற்கிளி என வழங்கி மகிழ்ச்சியடைகிறார்கள்.
கீரிமலை ஆதீனம் சிவஸ்ரீ. நகுலேஸ்வர குருக்கள், இணுவில் தர்மசாஸ்தா குருகுல அதிபர் சிவஸ்ரீ மஹாதேவ குருக்கள், சுன்னாகம் சிவஸ்ரீ சர்வேஸ்வர குருக்கள், நயினை சிவஸ்ரீ. வாமதேவ குருக்கள், அச்சுவேலி சிவஸ்ரீ. வைத்தீஸ்வர குருக்கள், வட்டுக்கோட்டை சிவஸ்ரீ பிரசாந்த குருக்கள் என தொடர்கிறது.

அதேபோல "நாதஸ்வர கலாநிதி" என ஈழ நல்லூர் திரு. பாலமுருகன், திரு. கேதீஸ்வரன், திரு. குமரன் என நீள்கிறது. சமூக சேவையில் திரு. ஆறுதிருமுருகன் அவர்கள், "திருமுறைக்கலாநிதி" எனவும் சிறப்பு செய்கிறார்கள்.
மேலும், அச்சுவேலி உலவிக்குளம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம், அச்சுவேலி சிவாகமஞானபானு சிவஸ்ரீ ச. குமாரசாமி குருக்கள் அவர்களின் நினைவு அறக்கட்டளை என்பவை இணையவழி மெய்வழியே ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் நடத்தும் "அகிலமெங்கும் ஒலித்திடும் சிவநெறிய திருமுறை விண்ணப்ப தெய்வீக அரங்கு" நிகழ்ச்சியில் ஆசி வழங்குவதுடன் வாரந்தோறும் தம்பிரான் சுவாமிகள் இணையவழி மெய்வழியே இணைந்து நல்வாழ்த்துக்கள் நல்லாசிகள் பகிர்ந்து மகிழ்ச்சி அடைகிறார்கள்.

திருக்கேதீச்சர நாதர் ஆலய சூழலில் தருமை ஆதீன கிளைமடம் இறை பணியாற்றி வருவதும் சிறப்புக்குரியது.
சன்னிதானம் அவர்களின் ஜனன நட்சத்திரம் இன்றாகும். இவ்வருடம் முழுவதும் மணிவிழா ஆண்டாக ஆதீனத்தினால் அறிவிக்கப்பட்டு நற்பணிகள் முன்னெடுக்கப்படுகிறது.
இன்று மயிலாடுதுறை தர்மபுரத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் ஒரு கிராம் நிறையுள்ள தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. 60 ஆயிரம் மரங்கள் நாட்டப்படுகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு நூலை வெளியீடு செய்கிறார்கள்.
இத்தகைய மகிழ்ச்சியான செய்திகளுடன் இந்துக்குருமார் அமைப்பினர் இலங்கை வாழ் சைவ மக்கள் சார்பில் தங்களின் அன்புக்கினிய மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் பகிர்ந்துகொள்வதாக இந்துக்குருமார் அமைப்பின் தலைவரும் செயலாளரும் தெரிவித்துள்ளனர்.


























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM