அம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராம, கச்சேரியகம பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற சந்தேக நபரொருவர் கீழே தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பாந்தோட்டை, வீரவில பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
அம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராம, கச்சேரியகம பிரதேசத்தில் இனங்காணாத நபர்கள் சிலர் புதையல் தோண்டுவதாக திஸ்ஸமஹாராம பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் புதையல் தோண்டிய சந்தேக நபர்களைக் கைது செய்ய முயன்ற போது சந்தேக நபர்கள் பொலிஸ் அதிகாரிகளிடமிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.
இதன்போது, அங்கிருந்த சந்தேக நபரொருவர் கீழே தவறி வீழ்ந்து மயங்கியுள்ளார்.
பின்னர், பொலிஸ் அதிகாரிகள் அனைவரும் மயங்கிய சந்தேக நபரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
உயிரிழந்த சந்தேக நபர் நீண்ட நாட்களாக சுகயீனமுற்று இருந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தப்பிச் சென்ற ஏனைய சந்தேக நபர்களைக் கைது செய்வது தொடர்பில் திஸ்ஸமஹாராம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM