இலங்கை வலுவான மற்றும் நிலையான மீட்சியின் பாதையில் செல்வதற்கு முன் நீண்டதூரம் பயணிக்கவேண்டியுள்ளதாக சர்வதேச நாணயநிதியத்தின் ஆசியா பசுபிக்கிற்கான திணைக்களத்தின் இயக்குநர் கிருஸ்ணா ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
தற்போது பரந்துபட்ட கருத்துடன்பாடு காணப்படுகின்றது,ஏகோபித்த கருத்துடன்பாடு காணப்படுகின்றது. 2022 இல் அதலபாதளத்தில் காணப்பட்ட இலங்கை சீர்திருத்தங்களை முன்னெடுப்பதில் நீண்ட தூரம் பயணித்துள்ளது,மிகவும் கடுமையாக முயன்று சில வெற்றிகளை பெற்றுள்ளது.உங்கள் அனைவருக்கும் இது தெரியும்.
கடந்த நான்கு காலாண்டுகளில் வளர்ச்சி சாதகமானதாக காணப்பட்டுள்ளது,பணவீக்கம் குறைவடைந்துள்ளது, வீழ்ச்சியடைந்துள்ளது,
மிகவும் கடுமையாக பாடுபட்டு பெறப்பட்டவெற்றிகள் பாதுகாக்கப்படும் அதனை கட்டியெழுப்பும் என்ற அர்ப்பணிப்பை புதிய அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வ கடன்வழங்குநர்களுடன் உடன்பாட்டை எட்டியுள்ளது,தனியார் கடன்கொடுநர்களுடன் கொள்கையளவிலான இணக்கப்பாட்டினை எட்டியுள்ளது அனைத்து கடன்வழங்குநர்களுடனும் உத்தியோகபூர்வ இணக்கப்பாட்டை எட்டுவதே அடுத்த நடவடிக்கை.அது பாரிய முன்னேற்றகரமான நடவடிக்கையாக காணப்படும்.
ஆனால் அத்துடன் இது முடிவிற்கு வரப்போவதில்லை.
சீர்திருத்தங்களை முன்னெடுப்பது தொடர்பில் இன்னும் அதிகளவு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
நீங்கள் வலுவான மற்றும் நிலையான மீட்சியின் பாதையில் செல்வதற்கு முன் நீண்டதூரம் செல்லவேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM