கூட்டு எதிர்க்கட்சியின் மே தின பொதுக்கூட்டத்துக்கு சென்ற நபரொருவரை காணவில்லையென பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவிசாவளை - சீதாகமை பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே (67 வயது) இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

குறித்த நபரின் உறவினர்கள் அவிசாவளை பொலிஸ் நிலையத்தில், நபர் காணமால் போயுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளனர்.

கூட்டு எதிரணியின் மேதின பொதுக்கூட்டம் கொழும்பு காலி முகத்திடல்  நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.