எங்களது கட்சியின் பிரசார நடவடிக்கையை குழப்புமாறு வேறு சில கட்சிகளின் தூண்டுதலில் பருத்தித்துறை பொலிஸார் செயற்பட்டார்களா என தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் சந்தேகம் வெளியிட்டார்.
பருத்தித்துறை பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் வரதராஜன் பார்த்தீபன் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், பருத்தித்துறை நகர பகுதியில் தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் வரதராஜன் பார்த்தீபன் தலைமையிலான அணியினர் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது பார்த்தீபனும் ஆதரவாளர்களும் பருத்தித்துறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.
எமது கட்சியினர் இவ்வாறு கைது செய்யப்பட்டிருப்பது எமது பிரசாரத்தை குழப்பும் செயலாகவே உள்ளது. எங்களது கட்சியின் பிரசார நடவடிக்கையை குழப்புமாறு வேறு சில கட்சிகளின் தூண்டுதலில் பொலிஸார் இவ்வாறு செயற்பட்டார்களா என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது.
எமது பிரசார நடவடிக்கையை திட்டமிட்டு குழப்பம் வகையான செயற்பாடாகவே இதனை நாம் பார்க்கின்றோம். இது எமது அடிப்படை உரிமைகளை மீறுகின்ற செயற்பாடு. இந்த செயலை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM