மகிழ்ச்சி என்பது மனதை பொறுத்தது. என்றாலும் பணம் -தனம்- இல்லை என்றால் மனம் மகிழ்ச்சியடையாது. செல்வ வளம் குறையாது வருகை தந்து கொண்டிருக்கும் போது தான் பொருளாதார ரீதியாக நாம் தன்னிறைவு பெற்று, மீதமுள்ள செல்வத்தை அல்லது மிச்சம் பிடிக்கும் செல்வத்தை தான தர்மங்களிலும், கல்வி உதவி மருத்துவ உதவி உள்ளிட்ட நற்காரியங்களுக்கு செலவிட்டு, அக மகிழ்ச்சியை அடைய முடியும்.
இதனால் எம்முடைய பொருளாதார நிலை மேம்படுவதுடன் தடையின்றி தனவரவு வருகை தருவதற்கு தேவையான வழிமுறைகளை எம்முடைய முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
இதற்கு தேவையான பொருட்கள்:
மஞ்சள் தூள்- பச்சை கற்பூரம் -ஏலக்காய்- வசம்பு தூள்- ஜாதிக்காய் தூள் -கிராம்பு தூள்- லவங்க பட்டை தூள்- ஜவ்வாது- பன்னீர் - தாழம்பூ குங்குமம் - வாயகன்ற பித்தளை பாத்திரம் - தண்ணீர் - வாசனை பூக்கள் - சந்தன நறுமணத்துடன் கூடிய ஊதுபத்தி.
ஒரு வியாழக்கிழமையை தெரிவு செய்து அதன், அந்தி நேரத்தில் அல்லது மதிய நேரத்தில் பன்னீரையும் , தண்ணீரையும் கலந்து சுத்தமான வெண்மை நிற துணி ஒன்றால் உங்களது வீட்டு வாசல் படியை தரையில் இருந்து ஒரு அடி உயரத்திற்கு துடைத்து விடவும்.
உங்களது வீட்டு வாசல் படி எந்த திசையை நோக்கி இருந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் நீங்கள் சொந்த வீட்டில் இருந்தாலும் அல்லது வாடகை வீட்டில் இருந்தாலும் வாசல் படியை ஒரு அடி உயரத்திற்கு நறுமணம் கமழ துடைத்து விடவும். அதன் பிறகு மேலே குறிப்பிடப்பட்ட பொருட்களை தூளாக்கி அதனை கலந்து வைத்திருங்கள்.
வெள்ளிக்கிழமை காலையில் சுக்கிர ஓரை என குறிப்பிடப்படும் ஆறு மணி முதல் ஏழு மணிக்குள் உங்களது வீட்டு வாசல் படி மீது மீண்டும் ஒருமுறை துடைத்துவிட்டு, தாழம்பூ குங்குமத்தால் ஒன்பது இடங்களில் பொட்டு வையுங்கள். பிறகு வாய் அகன்ற பித்தளை பாத்திரத்தில் தண்ணீரும், பன்னீரும் ஊற்றி, அதனுடன் நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் வாசனை திரவிய பொருட்களின் தூளை கலந்து விடுங்கள்.
அந்த தண்ணீர் மீது வாசனையான பூக்களையும் வைத்து வைத்து விடுங்கள். இதனைத் தொடர்ந்து அந்த பித்தளை பாத்திரத்திற்கு தீப தூபம் காட்டி, மகாலட்சுமியை மனதில் தியானித்து செல்வ வளம் தடையின்றி வரவேண்டும் என பிரார்த்தித்து, அந்த வாயகன்ற பித்தளை பாத்திரத்தை இரு கைகளாலும் ஏந்தி, உங்களது வீட்டிற்குள் வாருங்கள்.
அதன் பிறகு அந்த பாத்திரத்தை நேராக உங்களது வீட்டின் பூஜை அறைக்கு எடுத்துச் சென்று வைத்து விடுங்கள். அப்போது நீங்கள் தயாராக வைத்திருக்கும் மகாலட்சுமியின் உருவப்படத்திற்கு மீண்டும் ஒரு முறை தீப தூபம் காட்டி பிரார்த்தனை மேற்கொள்ளுங்கள்.
இதனை தொடர்ந்து ஒன்பது வெள்ளிக்கிழமைகளில் மேற்கொண்டால் உங்களது வருவாய் இரட்டிப்பாவதையும், தங்கு தடையின்றி வருவதையும் அனுபவத்தில் காணலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM