பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சுழற்சி நிறுத்தப் பாதிப்பிற்குரிய சிகிச்சை

Published By: Digital Desk 7

25 Oct, 2024 | 05:59 AM
image

இன்றைய இளம் தலைமுறை பெண்களும், பெண்மணிகளும் மாதவிடாய் சுழற்சி தொடர்பாக ஏராளமான ஆரோக்கிய கேடுகளை எதிர்கொள்கிறார்கள்.

நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்மணிகளுக்கு மாதவிடாய் சுழற்சி நின்றுவிடும். இதன் பிறகு அவர்களுடைய ஆரோக்கியத்தில் மாதவிடாய் சுழற்சியின் நிறுத்தம் காரணமாகவே பல்வேறு பாதிப்புகளும், பக்கவிளைவுகளும் உண்டாகும்.

குறிப்பாக எலும்புகளின் ஆரோக்கியம், இதய ஆரோக்கியம் ஆகியவற்றில் பக்க விளைவுகள் உண்டாகும். இதற்காக மருத்துவர்கள் ஹோர்மோனல் தெரபி எனும் சிகிச்சையின் மூலம் முழுமையான நிவாரணம் பெறலாம் என அறிவுறுத்துகிறார்கள்.

இந்த தருணத்தில் எம்முடைய பெண்மணிகளில் பலரும் மாதவிடாய் சுழற்சியில் ஏற்பட்ட இடையூறு காரணமாக அல்லது வேறு வகையினதான பாதிப்பின் காரணமாக நிவாரணம் பெறுவதற்கு ஹோர்மோன் தெரபியை மேற்கொண்டு இருப்பார்கள். இவர்கள் மாதவிடாய் சுழற்சி நின்ற பிறகும் இத்தகைய சிகிச்சையை தொடர வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்தி இருப்பார்கள்.

மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்மணிகள் அந்த தருணத்தில் இதற்கான பிரத்யேக அறிகுறிகளை உணர்வார்கள். அதீத வியர்வை, Genitourinary Atrophy எனும் பாதிப்பு, வலி ஆகிய அறிகுறிகள் உண்டாகும்.

இதற்குப் பிறகு வைத்தியர்களை சந்தித்தால் அவர்கள் ஹோர்மோன் தெரபி மற்றும் ஈஸ்ட்ரோஜன் தெரபி ஆகியவற்றை வழங்கி நிவாரணம் அளிப்பார்கள்.

 மாதவிடாய் சுழற்சி நின்ற பிறகு ஏற்படும் பாதிப்பை சீராக்கிக் கொள்வதற்காக மாதவிடாய் சுழற்சி நிற்கும் தருணங்களில் இருந்து சிகிச்சையை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டும். அதிலும் வைத்தியர்கள் பரிந்துரைக்கும் சிகிச்சையை மேற்கொள்ளும் போது உங்கள் ஆயுள் முழுதும் ஆரோக்கியத்துடன் வாழ இயலும். 

மேலும் மாதவிடாய் சுழற்சி நின்ற பிறகு வைத்தியர்கள் முழுமையான உடல் பரிசோதனையை மேற்கொள்ளவும் பரிந்துரைப்பார்கள். இதனையும் மேற்கொண்டால் அதற்கு ஏற்ப உங்களது சிகிச்சை தீர்மானிக்கப்படும். இதற்காக தற்போது மாதவிடாய் சுழற்சி நிறுத்தப் பாதிப்பிற்குரிய பிரத்யேக ஹோர்மோன் தெரபி நிவாரண சிகிச்சையாக வழங்கப்படுகிறது.

வைத்தியர் ஜெயஸ்ரீ

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரத்த நாளங்களில் ஏற்படும் அனியூரிஸம் பாதிப்பிற்குரிய...

2024-11-08 15:42:09
news-image

பாத வெடிப்பு பாதிப்பிற்குரிய நிவாரண சிகிச்சை

2024-11-06 17:34:15
news-image

முதுகு வலிக்கான நிவாரணம் தரும் அங்கியை...

2024-11-05 19:33:05
news-image

அக்யூட் ஃபிப்ரைல் இல்னஸ் எனும் கடுமையான...

2024-11-04 17:07:17
news-image

பெண்மணிகளுக்கு ஏற்படும் பைலோட்ஸ் கட்டி பாதிப்பிற்குரிய...

2024-11-02 14:12:41
news-image

விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் ஹெர்னியா பாதிப்புக்குரிய...

2024-11-01 18:42:51
news-image

மீடியல் டைபியல் ஸ்ட்ரெஸ் சிண்ட்ரோம் எனும்...

2024-10-30 15:54:33
news-image

கேங்க்லியன் நீர்க்கட்டி எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-10-29 16:09:36
news-image

ஒட்டோமைகோசிஸ் எனப்படும் காதில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2024-10-28 17:20:21
news-image

சமச்சீரற்ற இதயத் துடிப்பு பாதிப்பை துல்லியமாக...

2024-10-26 18:35:49
news-image

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சுழற்சி நிறுத்தப்...

2024-10-25 05:59:15
news-image

நீர்ச் சத்து குறைபாட்டின் காரணமாகவும் சிறுநீரக...

2024-10-23 18:28:12