ஜெயம் ரவி நடிக்கும்' பிரதர் 'படத்தின் பாடலுக்கான காணொளி வெளியீடு

Published By: Digital Desk 7

25 Oct, 2024 | 05:58 AM
image

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் 'பிரதர் ' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'மிதக்குது காலு ரெண்டு..' என தொடங்கும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பிரதர்' எனும் திரைப்படத்தில் ஜெயம் ரவி, பிரியங்கா அருள் மோகன், நட்டி என்கிற நட்ராஜ், பூமிகா சாவ்லா, வி டிவி கணேஷ், ராவ் ரமேஷ், அச்யுத் குமார், சரண்யா பொன்வண்ணன், சீதா, எம். எஸ். பாஸ்கர் , சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

விவேகானந்த சந்தோஷம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் தயாரித்திருக்கிறது.

தீபாவளி திருநாளான ஒக்டோபர் 31ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற 'மக்கா மிஷி..' எனும் பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற 'மிதக்குது காலு ரெண்டு.' எனும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியை பார்வதி மீரா எழுத, பின்னணி பாடகி மது ஸ்ரீ பாடியிருக்கிறார்.

திருமண வைபவ கொண்டாட்டத்தின் பின்னணியில் உற்சாகத்துடன் ஒலிக்கும் இந்தப் பாடல் இனி அனைத்து திருமண நிகழ்வுகளிலும் நடனத்துடன் ஒலிக்கும் என கூறலாம்.‌

இந்த பாடலும் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜூன் மாதம் வெளியாகும் இசக்கி கார்வண்ணனின்...

2026-05-21 16:59:42
news-image

மலேசிய றாப்பர் கிட் சாந்தேவின் 'நா...

2026-05-21 16:59:17
news-image

சமூக வலைதள வாசிகளின் வாழ்வியலை விவரிக்கும்...

2026-05-21 16:16:00
news-image

தென் தமிழக நாட்டார் கதையில் நாயகனாக...

2026-05-21 15:55:53
news-image

அர்ஜுன் தாஸ் நடிக்கும் 'கான் சிட்டி'...

2026-05-21 15:52:28
news-image

தாழ் திறவா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்...

2026-05-20 14:41:54
news-image

சாதனை படைத்து வரும் ஜூனியர் என்டிஆர்...

2026-05-20 14:41:32
news-image

கதாநாயகனாக அறிமுகமாகும் லண்டன் வாழ் ஈழத்தமிழர்...

2026-05-21 00:12:53
news-image

ஜியோ ஹாட்ஸ்டார் டிஜிட்டல் தளத்தில் ஜூலையில்...

2026-05-20 13:22:56
news-image

நடிகர் ருத்ரா நடிக்கும் ‘யெல்லோ யெல்லோ...

2026-05-20 13:17:54
news-image

தக்ஸீலா” திரைப்பட விமர்சனம் – செயற்கை...

2026-05-20 11:31:52
news-image

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்கு ஆதரவளிக்கும் இசைஞானி...

2026-05-20 11:31:30