வவுனியா சிதம்பரபுரத்தில் நேற்று (03) கஞ்சா வைத்திருந்த சந்தேச நபரை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட சமயத்தில் சந்தேகநபர் தப்பியோடியுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா சிதம்பரபுரத்தில் நேற்று (03) பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபரை துரத்த முற்பட்ட சமயத்தில் சந்தேக நபர் கஞ்சா பையை கீழே வீசி விட்டு தப்பித்து சென்றுள்ளார்.

சிதம்பரபுரம்- கற்குளத்தில் வசித்து வரும் நபர் ஒருவரே ( வயது - 34)  இவ்வாறு தப்பியோடியுள்ளதாகவும், அவரை தேடும் பணியில் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.  இதேவேளை இவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.