அபிவிருத்திக்கான சந்தர்ப்பங்களை வட மாகாணசபை தவறவிட்டுள்ளது : தவராசா 

Published By: Ponmalar

03 May, 2017 | 08:19 PM
image

வடக்கு மாகாணம் ஆளுநர் ஆட்சியில் இருந்ததைவிட புதிதாக என்ன அபிவிருத்தியை கண்டிருக்கிறது? என கேள்வி எழுப்பிய வடக்கு மாகாணசபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா, அபிவிருத்திக்கு கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களையும் வடக்கு மாகாணசபை தவறவிட்டிருக்கின்றது என குற்றஞ்சாட்டியுள்ளார்.

வட மாகாணசபையின் மூன்றரை வருட செயற்பாடுகள் தொடர்பாக யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “வடக்கு மாகாணம் கல்வியிலும் அபிவிருத்தியிலும் 9 ஆவது இடத்தில் காணப்படுகிறது. குறைந்தபட்சம் ஆசிரியர்களையேனும் சரியாக பங்கிடத்தெரியாத நிலையில் வடக்கு மாகாணசபை உள்ளது.

அதேவேளை, வடக்கில் கழிவு முகாமைத்துவம் முறையாக செய்யப்படாத நிலையில் மாநகரம் கழிவுகளால் நிரம்பி காணப்படுகின்றது. வடக்கு  மாகாணசபை செய்யவேண்டிய விடயங்களைக்கூட செய்யாமல் விட்டிருக்கின்றது.

அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு நியதிச்சட்டங்களை உருவாக்கவேண்டும் அவற்றைக்கூட இந்த மாகாணசபை செய்திருக்கவில்லை.

அரசாங்கம் வழங்கும் மிக சொற்பமான நிதியை தவிர இந்த மாகாணசபை வேறு எந்த நிதியை பெற்றிருக்கின்றது? சுகாதார அமைச்சு, அரசு வழங்கும் நிதிக்கு மேலதிகமாக சுமார் 9 ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதியை பெற்று மக்களுக்காக பயன்படுத்தியுள்ளது.

இதேபோன்று இரணைமடு- யாழ்ப்பாணம் நீர் திட்டத்தை நிராகரித்தவர்கள் இதுவரை அதற்காக வழங்கிய மாற்று திட்டம் என்ன? சுமார் 360 தீர்மானங்களை வடக்கு மாகாணசபை நிறைவேற்றியுள்ள போதிலும் அதனால் எந்த பயனும் கிடையாது. தீர்மானங்கள் சட்ட வலுவற்றவை” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09