ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு இந்தியா வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த அழைப்பை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
16வது பிரிக்ஸ் மாநாட்டில், ரஷ்யாவின் கசான் நகரில் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்தார்.
அடுத்த ஆண்டு 23-ஆவது இந்தியா - ரஷ்யா ஆண்டு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி புடினுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் மக்களிடையேயான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை இரு தலைவர்களும் மதிப்பாய்வு செய்ததாக இந்திய பிரதமர் அலுவலகம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
22 ஜூலை 2024 இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டிற்காக இரு தலைவர்களும் முன்னதாக மாஸ்கோவில் சந்தித்ததால், இந்த ஆண்டு இது அவர்களின் இரண்டாவது சந்திப்பு என்று வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்தன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM