(பல்லேகலையிலிருந்து நெவில் அன்தனி)
கண்டி பல்லேகலை சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் 36 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 189 ஓட்டங்களைக் குவித்தது.
மழை காரணமாக 2 மணி நேரம் தாமதித்து ஆரம்பித்த இன்றைய போட்டி அணிக்கு 44 ஓவர்கள் என நிர்ணயிக்கப்பட்டது.
இலங்கை அணியின் மோசமான களத்தடுப்பு மேற்கிந்தியத் தீவுகளை கௌரவமான நிலையில் இட்டது.
குடாகேஷ் மோட்டி 31 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கொடுத்த மிக உயரமான பிடியை ஜனித் லியனகே தவறவிட்டது மேற்கிந்தியத் தீவுகளுக்கு சாதமாக அமைந்தது.
இதனைத் தொடர்ந்து ஷேரஃபேன் ரதர்ஃபர்ட், குடாகேஷ் மோட்டி ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்ததுடன் 9ஆவது விக்கெட்டில் சாதனைமிகு 119 ஓட்டங்களைப் பகிர்ந்து மேற்கிந்தியத் தீவுகளின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தனர்.
ரதர்ஃபர்ட் 80 ஓட்டங்களையும் மோட்டி 50 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 4 விக்கெட்களையும் மஹீஷ் தீக்ஷன, அசித்த பெர்னாண்டோ ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இலங்கை அணி 44 ஓவர்களில் 190 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு சற்று நேரத்தில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM