களுத்துறை வடக்கு, வஸ்கடுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் நுழைந்து கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த ஒன்றரை வயது சிறுமியின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைத் திருடிச் சென்றதாகக் கூறப்படும் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
திருடப்பட்டதாக கூறப்படும் தங்கச் சங்கிலியின் பெறுமதி 119,000 ரூபா ஆகும்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
சம்பவத்தன்று சிறுமியின் பெற்றோர் வேலைக்குச் சென்றுள்ள நிலையில் சிறுமியும் சிறுமியின் பாட்டியும் வீட்டில் தனிமையிலிருந்துள்ளனர்.
இதன்போது, சிறுமியின் பாட்டி துணிகளைத் துவைத்து விட்டு அதனைக் காய வைப்பதற்காக வீட்டிற்கு வெளியே சென்றுள்ளார்.
சிறுமியின் பாட்டி வீட்டில் இல்லாததை அவதானித்த சந்தேக நபர், வீட்டிற்குள் நுழைந்து கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த சிறுமியின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைத் திருடி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இனங்காணாத நபரொருவர் வீட்டிலிருந்து வெளியே செல்வதைக் கண்ட பாட்டி உடனடியாக வீட்டிற்குள் சென்று பார்த்த போது சிறுமி அலறிக்கொண்டிருப்பதை அவதானித்துள்ளார்.
பின்னர், சிறுமியின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலி காணாமல் போயுள்ளதை அவதானித்த பாட்டி இது தொடர்பில் சிறுமியின் பெற்றோருக்கு அறிவித்துள்ளார்.
இதனையடுத்து, இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM