புத்தளத்தில் 75 இலட்சம் ரூபா பெறுமதியான பீடி இலைகள் கைப்பற்றல் : சந்தேக நபர்கள் தப்பியோட்டம் !

23 Oct, 2024 | 05:35 PM
image

புத்தளம் - பாலாவி பகுதியில் 75 இலட்சம் ரூபா பெறுமதியான பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.   

இந்த சம்பவம் இன்று புதன்கிழமை (23) இடம்பெற்றுள்ளது.    

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,    

பீடி இலைகள் லொறியில் கடத்திச் செல்வதாக தம்பபண்ணி கடற்படையினருக்குக் தகவல் கிடைத்துள்ளது.   

இதனடிப்படையில் மேல்கொண்ட சுற்றிவளைப்பின் போதே லொறியை நிறுத்திவிட்டு சந்தேக நபர்கள் தப்பிச்சென்றுள்ளனர்.   

இதன்போது குறித்த லொறியை சோதனையிட்டபோது சுமார் 60 மூடைகளில் 1535 கிலோகிராம் பீடி இலைகள் கைப்பற்றியுள்ளனர்.   

இவ்வாறு கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் சுமார் 75 இலட்சம் ரூபா பெறுமதியென மதிப்பிடப்ப்ட்டுள்ளது. 

குறித்த பீடி இலைகள் அனுமதிப் பத்திரமின்றி சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கடல்மார்கமாக கொண்டுவரப்பட்டிருக்கலாமென சந்தேகிப்பதாக கடற்படையினர் தெரிவித்தனர். 

கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லொறி ஆகியவற்றை புத்தளம் கலால் வரித் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.   

மேலதிக விசாரணைகளை புத்தளம் கலால் வரித் திணைக்கள அதிகாரிகள் முன்மெடுத்து வருவதாக இதன்போது தெரிவித்தனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46
news-image

எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு...

2025-02-09 17:19:20
news-image

பல பகுதிகளில் மீண்டும் மின் விநியோகம்...

2025-02-09 20:53:14
news-image

43 பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்ட நட்டயீட்டை...

2025-02-09 17:26:07
news-image

யாழில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர்...

2025-02-09 20:01:19
news-image

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் விரைவில் மக்கள்...

2025-02-09 17:22:43
news-image

புத்தளத்தில் வெளிநாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர்...

2025-02-09 19:35:02
news-image

ராகமயில் பெண் கொலை : சந்தேகத்தில்...

2025-02-09 19:12:58
news-image

மதவாச்சியில் சட்ட விரோத சிகரெட்டுகளுடன் ஒருவர்...

2025-02-09 19:11:22