இலங்கைக்கு இஸ்ரேலை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருவதன் காரணமாகவும் அவர்கள் அறுகம்குடாவில் ஒரு கட்டிடத்தை ஆக்கிரமித்துள்ளதன் காரணமாகவும் அந்த பகுதியில் தாக்குதல் நடைபெறக்கூடிய சாத்தியமுள்ளதாக அமெரிக்கா எச்சரித்திருக்கலாம் என பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்டுவ தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
இலங்கைக்கு சுற்றுலாப்பயணம் மேற்கொள்ளும் இஸ்ரேலியர்கள் அதிகளவில் அறுகம்குடாவிற்கே செல்கின்றனர்.அந்த பகுதியே அவர்களின் அதிக விருப்பத்திற்குரிய பகுதியாக காணப்படுகின்றது,அவர்கள் அங்கு நீச்சல் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.
அங்கு சென்றுள்ள சுற்றுலாப்பயணிகள் அங்கு கட்டிடமொன்றை ஆக்கிரமித்துள்ளனர்,இந்த பகுதியில் இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் காணப்படுவதால் அங்கு அச்சுறுத்தல் நிலவுகின்றது என சமீபத்தில் எங்களிற்கும் தகவல்கள் கிடைத்தன.
ஆரம்பகட்ட நடவடிக்கையாக நாங்கள் ஏற்கனவே வீதிதடைகளை அமைத்துள்ளோம்,வாகனங்களையும் பொதுமக்களையும் சோதனையிடும் நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளோம்.
பொலிஸார் விசேட அதிரடிப்படையினர் கடற்படையினர் இராணுவத்தினர் அரசபுலனாய்வு திணைக்களத்தினர் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM