இலங்கை அரசியல்வாதிகள் தங்கள் தனிப்பட்ட நலன்களை மையமாக வைத்து செயற்பட்ட சில சந்தர்ப்பங்கள் உள்ளன - இலங்கையில் தனது அனுபவங்கள் குறித்து ஜப்பான் தூதுவர்

Published By: Rajeeban

23 Oct, 2024 | 11:48 AM
image

இலங்கை அரசியல்வாதிகள் தங்கள் நலன்களை அடிப்படையாக வைத்து செயற்பட்ட சந்தர்ப்பங்கள் உள்ளன  அவர்கள் தங்கள் நலன்களிற்காக அனுகூலங்களை எதிர்பார்த்தார்கள்  என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேகி தெரிவித்துள்ளார்

பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வெளிப்படையான எதிர்கூறத்தக்க வர்த்தக சூழல் இல்லை என தெரிவித்துள்ள அவர் ஜப்பானிய நிறுவனங்கள் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை  இலஞ்ச ஊழல் அற்றவை என குறிப்பிட்டுள்ளார்.

அவை இலஞ்சம் பெறுவதில்லை என  குறிப்பிட்டுள்ள தூதுவர் இலஞ்சம் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தால் ஜப்பான் நிறுவனங்கள் அந்த நாட்டிலிருந்து வெளியேறி விடுவது வழமை எனவும்  தெரிவித்துள்ளார்.

கேள்வி - நாங்கள் தற்போது சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தின் நடுவில் உள்ளோம் தற்போதைய அரசாங்கம் இதனை தொடர்ந்து முன்னெடுக்கும் என்பது குறித்து எவ்வளவு தூரம் நம்பிக்கை கொண்டுள்ளீர்கள்?

பதில்- நான் ஏற்கனவே ஜனாதிபதி பிரதமர் வெளிவிவகார அமைச்சருடன்  பேச்சுவார்த்தைகளை மேற்;கொண்டுள்ளேன்.இந்த பேச்சுவார்த்தைகளின் மூலம் புதிய அரசாங்கம் சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தின் பிரதான கட்டமைப்பை பேணுகின்றது என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டுள்ளது.

அவர்கள் இதனை வெளிப்படையாகவும் தெரிவித்துள்ளனர்.சர்வதேச நாணயநிதியத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட திறைசேரியின் செயலாளரை அவர்கள் மீண்டும் அந்த பதவிக்கு நியமித்துள்ளனர்.

சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்படிக்கையை புதிய அரசாங்கம் மதிக்கின்றது  என்பதற்கான சிறந்த சமிக்ஞை இது.

கேள்வி - சமீபத்தைய உரையொன்றின் போது நீங்கள் ஊழல் குறித்து கருத்து தெரிவித்தீர்கள் - இலங்கையில் இது எவ்வளவு தூரம் பிரச்சினைக்குரிய விடயம்?

பதில்- இந்து சமுத்திரத்தில் அதன் அமைவிடத்தை கருத்தில் கொள்ளும்போது இலங்கை பொருளாதார வளர்ச்சிக்கான அதிக சாத்தியப்பாடுகளை கொண்டுள்ளது என நான் கருதுகின்றேன்.

90 வீத சர்வதேச வர்த்தகத்தின் மையமாக இலங்கை காணப்படுகின்றது,இந்த பிராந்தியத்தின் ஊடாகவே 70 வீத பெட்ரோல் கொண்டு செல்லப்படுகின்றது.

இதன் காரணமாக இலங்கைக்கு ஜப்பான் உட்பட உல நாடுகளிடமிருந்து வெளிநாட்டு முதலீடுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஆனால் ஜப்பானிய வர்த்தகர்களை செவிமடுத்தால் அவர்கள் இலங்கையில் தாங்கள் வெளிப்படையற்ற வர்த்தக நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவது குறித்து கருத்து தெரிவிக்கின்றனர்.

உதாரணத்திற்கு சுங்கம் பொருட்களை வெளியில் கொண்டு செல்வதற்கு உரிய நேரத்தில் அனுமதி வழங்குவதில்லை.அதிகாரிகள் அதிக ஆவணங்களை கோருகின்றனர்.

அனைவருக்கும் நியாயமான வெளிப்படையான எதிர்வுகூறக்கூடிய வர்த்தக சூழலை இலங்கையில் ஜப்பானிய முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இலங்கையில் அந்த சூழல் இல்லை.

இந்த விடயத்தில் இலங்கை முன்னேற்றம் காண்பது அவசியம்.

ஊழலை ஒழிப்பதற்கான மக்கள் ஆணையுடனேயே புதிய ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவு செய்யப்பட்டார்,இதுவே அவரது முக்கியமான பிரதானமான நிகழ்ச்சி நிரல்.

பழைய நடைமுறைகளை கைவிட்டுவிட்டு புதிய வர்த்தக சூழலை உருவாக்குவதற்கான தருணம் இது.

கேள்வி- நீங்கள் சுங்கத்தில் தாமதங்கள் குறித்து கருத்து தெரிவித்தீர்கள் இதற்கு அவர்கள் இலஞ்சம் கோருவது காரணமா? உங்களிற்கு இது தொடர்பில் ஏதாவது அனுபவம் உள்ளதா?

பதில்- அவர்கள் வெளிப்படையாக இலஞ்சம் கோருவதில்லை, இலங்கை எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டவேளை இலங்கை சிறுவர்களிற்காக துவிச்சக்கரவண்டிகளை இறக்குமதி செய்த சம்பவம் குறித்து நான் குறிப்பிட்டிருந்தேன்.

வீதிகளில் கைவிடப்பட்ட துவிச்சக்கரவண்டிகளை ஜப்பான் மாநகரசபை இலங்கை சிறுவர்கள் பயன்படுத்துவதற்காக வழங்கியது.

ஆனால் அது சுங்கதிணைக்களத்திலிருந்து வெளியே வருவதற்கு ஒருவருடமாகியது.அவ்வேளை சேமிப்பக செலவுகள் போன்றன காணப்பட்டன.

ஆகவே ஜப்பான் மக்கள் இவ்வாறான விடயங்களை எதிர்கொள்ளும்போது இலங்கையில் வர்த்தகத்தில் ஈடுபடுங்கள் என  ஏனையவர்களிற்கு பரிந்துரை செய்ய முடியாது.

ஜப்பானிய நிறுவனங்கள் இலஞ்ச ஊழலில் ஈடுபவதில்லை அவை மிகவும் சுத்தமானவை இலஞ்சம் கோரினால் அவர்கள் அந்த நாட்டிலிருந்து  வெளியேறிவிடுவார்கள்.

கேள்வி - அரசாங்கத்தின் நடவடிக்கை எவ்வாறானதாக காணப்படும்?

பதில்-சில சந்தர்ப்பங்களில் அவர்கள் மிகவும் துரிதமாக செயற்படுவார்கள் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாலும் அடுத்தடுத்த மட்டங்களில் உள்ளவர்கள் செயற்படுவதில்லை.

கேள்வி - முன்னாள் அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வா ஜப்பான் நிறுவனத்திடமிருந்து 200 மில்லியன் இலஞ்சம் கோரினார் என தெரிவிக்கப்பட்டது இது இரு நாடுகளின் உறவுகளை எவ்வாறு பாதித்தது?

பதில்- குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்கள் குறித்து கருத்து தெரிவிப்பதை நான் தவிர்த்து விடுகின்றேன்.

அரசியல்வாதிகள் தங்கள் நலன்களிற்காக ஆதாயம் பெறமுயன்ற சந்தர்ப்பங்கள் சில உள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24
news-image

பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை...

2025-02-11 17:26:43
news-image

பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின்...

2025-02-11 17:25:53
news-image

வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க...

2025-02-11 16:20:05
news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14
news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06
news-image

முகத்துவாரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2025-02-11 18:38:34
news-image

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

2025-02-11 17:18:28
news-image

ஜப்பானிய காகித மடிப்புக் கலையை ஊக்குவிக்கும்...

2025-02-11 17:21:24