மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 7 இலங்கை மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

மீனவர்கள் பயன்படுத்திய 2 டிங்கி படகுகளையும் 4 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளையும் 2,210 கிலோகிராம் மீன்களையும் பறிமுதல் செய்த கடற்படையினர், மேலதிக விசாரணைகளுக்காக கைதுசெய்த 7 மீனவர்களையும் மன்னார் கடற்றொழில் உதவிப்பணிப்பாளரிடம் ஒப்படைத்துள்ளனர்.