ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார செலவு விபரம் : விபரத்திரட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படும் ; தேர்தல்கள் ஆணைக்குழு

22 Oct, 2024 | 09:47 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜனாதிபதித் தேர்தல் போது பிரச்சாரங்களுக்காக வேட்பாளர்கள் செலவு செய்த செலவுகள் தொடர்பான விபரங்களை  அறிந்துக் கொள்ளும் உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு. ஆகவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள செலவினங்கள் தொடர்பான விபரங்களை காட்சிப்படுத்தும், இடம் மற்றும் திகதி இன்று அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பொதுத்தேர்தலுக்கான பணிகள் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றன. தேர்தல் செலவினங்கள் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்டங்களின் நிலப்பரப்பு  மற்றும் சனத்தொகை,  தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் யோசனைகளுக்கு அமைவாகவே  தேர்தல் செலவுத்  தொகை தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே தேர்தல் பிரச்சார செலவுத் தொகை மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுப்படும். 

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் தேர்தல் பிரச்சார செலவுகள் தொடர்பிலான குறிப்புக்களை முறையாக பேண வேண்டும். முடிவுகள் வெளியாகி 21 நாட்களுக்குள் செலவினம் தொடர்பான விபரங்களை ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்க வேண்டும். செலவுகளை சமர்ப்பிக்காவிடின் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். 

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்கள் உரிய காலத்தில் பிரச்சார செலவினங்கள் தொடர்பிலான விபரத்  திரட்டை உரிய காலத்தில் சமர்ப்பித்தனர். 3 வேட்பாளர்கள் தாமதமான நிலையில் தான் விபரங்களை சமர்ப்பித்தனர்.10 அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சார செலவுகளை சமர்ப்பிக்கவில்லை. 

ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் போது வேட்பாளர்கள் செலவு செய்த செலவுகள் தொடர்பான விபரங்களை அறிந்துக் கொள்ளும் உரிமை நாட்டு மக்களுக்கு உண்டு. ஆகவே சமர்ப்பிக்கப்பட்டுள்ள விபரங்களை காட்சிப்படுத்தும், இடம் மற்றும் திகதி தொடர்பான விபரங்கள் இன்று அறிவிக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புலிகளால் 33,000 மெகாவோல்ட் மின் பிறப்பாக்கி...

2025-02-11 15:11:06
news-image

வானிலை மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடிய விவசாயத்துக்கான கூட்டுத்திட்டம்...

2025-02-11 22:26:46
news-image

இழப்பீடுகள் தொடர்பில் விரைவில் முழுமையான அறிக்கை...

2025-02-11 22:29:08
news-image

வீட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் உத்தியோகபூர்வமாக...

2025-02-11 15:56:24
news-image

பொய்யான தகவல்கள் மூலம் மின்விநியோக பிரச்சினைகளை...

2025-02-11 17:26:43
news-image

பெலவத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட நவீன கட்டமைப்பின்...

2025-02-11 17:25:53
news-image

வரவு செலவு திட்டத்தின் மூலம் அரசாங்க...

2025-02-11 16:20:05
news-image

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் தமிழ்த்தலைமைகள் பொதுநிலைப்பாடொன்றுக்கு...

2025-02-11 17:29:14
news-image

ஐக்கிய அரபு எமிர் குடியரசுடன் முதலீட்டு...

2025-02-11 17:20:06
news-image

முகத்துவாரத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

2025-02-11 18:38:34
news-image

லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

2025-02-11 17:18:28
news-image

ஜப்பானிய காகித மடிப்புக் கலையை ஊக்குவிக்கும்...

2025-02-11 17:21:24