சூர்யா நடிக்கும் 'கங்குவா' படத்தின் பாடல் வெளியீடு

Published By: Digital Desk 7

22 Oct, 2024 | 04:36 PM
image

பான் இந்திய நட்சத்திரமாக உயர்வதற்கு கடுமையாக முயற்சி செய்து வரும் நடிகர் சூர்யா முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'கங்குவா' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ' யோ லோ' எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கங்குவா ' எனும் திரைப்படத்தில் சூர்யா, திஷா படானி, பாபி தியோல், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு' ராக்ஸ்டார் ' தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார்.

பிரம்மாண்டமான ஃபேண்டஸி எக்ஷன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யு வி கிரியேசன்ஸ் ஆகிய நிறுவனங்களில் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. ஈ. ஞானவேல் ராஜா- வம்சி -பிரமோத் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் இந்த 'கங்குவா' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'ஹோல்ட் மீ.. ஹக் மீ.. கிஸ் மீ..'  எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

இந்த பாடலை பாடலாசிரியர் விவேகா எழுத, பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் லாபிதோ லோபோ ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.

இந்தப் பாடல் ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத்தின் பிரத்யேக துள்ளலிசை  மெட்டுடன்  ஆங்கிலமும், தமிழும் கலந்த தங்கிலீஷ் வார்த்தைகளுடன் வெளியாகி இளம் தலைமுறை மற்றும் இணைய தலைமுறை ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

இந்தப் பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் நான்கு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரட்சிதா மகாலட்சுமி நடிக்கும் 'எக்ஸ்ட்ரீம்' படத்தின்...

2024-12-11 17:37:18
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட நடிகர்...

2024-12-11 17:04:42
news-image

நடிகர் காளிதாஸ் ஜெயராம் திருமணம்: முதல்வர்...

2024-12-11 17:04:15
news-image

நடிகர் துல்கர் சல்மான் வெளியிட்ட சமுத்திரக்கனியின்...

2024-12-10 18:41:08
news-image

பார்வையாளர்களின் கவனம் ஈர்க்கும் சீயான் விக்ரமின்...

2024-12-10 15:06:20
news-image

ஜார்ஜியாவில் லெஜண்ட் சரவணன்

2024-12-10 14:14:17
news-image

வசூலில் அதிரடி காட்டும் அல்லு அர்ஜுனின்...

2024-12-10 14:09:49
news-image

இறுதி கட்டத்தில் கௌதமன் நடிக்கும் '...

2024-12-10 14:10:21
news-image

விஜய் தேவரகொண்டா வெளியிட்ட நடிகை ராஷ்மிகா...

2024-12-10 14:10:48
news-image

இயக்குநர் பேரரசு தொடங்கி வைத்த 'சதுரங்க...

2024-12-10 12:14:23
news-image

பக்தி பாடல்களுக்கு முதல் முறையாக இசையமைத்த...

2024-12-10 11:58:52
news-image

ஷேன் நிஹாம் நடிக்கும் 'மெட்ராஸ்காரன்' படத்தின்...

2024-12-09 13:40:24