அக்குரஸ்ஸயில் கூரை உடைந்து தலையில் வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு !

Published By: Digital Desk 2

22 Oct, 2024 | 02:00 PM
image

மாத்தறை, அக்குரஸ்ஸ நகரத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்திற்கு அருகில் உள்ள பழைய கட்டிடம் ஒன்றின்  கூரை உடைந்து வீழ்ந்து ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறை கதிரத்தஹேன பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஹேவா பெட்டகே ரஜித் பிரியந்த என்பவரே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

அக்குரஸ்ஸ நகரத்தில் அமைந்துள்ள  பழைய கட்டிடம் ஒன்றின் இரண்டாவது மாடியின் கொன்கிரீட் தளத்தை அகற்றும் பணியில் இருவர் ஈடுபட்டிருந்துள்ளனர்.

அவர்களில் ஒருவரின் தலையில் கூரையின் ஒரு பகுதி உடைந்து வீழ்ந்துள்ள நிலையில் சுவரின் ஒரு பகுதியும் இடிந்து வீழ்ந்துள்ளது.

படுகாயமடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2050-க்குள் ஆசியா பொருளாதார மையமாகும்; இலங்கை...

2026-07-16 16:59:30
news-image

சிறைச்சாலைத் திணைக்களத்தில் புதிய ஆட்சேர்ப்பு, சேவை...

2026-07-16 13:15:11
news-image

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க...

2026-07-16 16:07:33
news-image

சுமந்திரனின் முன்மொழிவை தொல்பொருள் பணிப்பாளர் ஏற்றுக்கொண்டமை...

2026-07-16 16:08:27
news-image

அரசாங்கத்துக்கு எதிராக மக்களை வீதிக்கு இறங்குமாறு...

2026-07-16 16:14:53
news-image

எமது காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை...

2026-07-16 21:56:39
news-image

கனகராயன்குளத்தில் 14 வயது மகளை பாலியல்...

2026-07-16 21:52:12
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் : கைதிகளின்...

2026-07-16 19:10:42
news-image

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானை தமிழக...

2026-07-16 21:33:34
news-image

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு...

2026-07-16 19:10:22
news-image

செம்மணி மனித புதைகுழியில் மேலும் 6...

2026-07-16 21:19:42
news-image

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு...

2026-07-16 19:09:32