இஸ்ரேலில் வேலை தேடுபவர்களிடம் போலியான தொலைபேசி அழைப்புகள் மூலம் பண மோசடி ; பொதுமக்களுக்கு எச்சரிக்கை

22 Oct, 2024 | 04:35 PM
image

இஸ்ரேலில் வேலை தேடுபவர்களிடம் போலியான தொலைபேசி அழைப்புகள் மூலம் பணமோசடி செய்யும் நடவடிக்கை குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா இது தொடர்பில் தெரிவிக்கையில், 

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊழியர்கள் என்ற போர்வையில் இஸ்ரேலில் வேலை வாய்ப்பு எதிர்பார்த்து  விண்ணப்பித்துள்ளவர்களிடம்  போலியான தொலைபேசி அழைப்புகள் மூலம் தொடர்பு கொண்டு விண்ணப்பத்திற்காக மேலதிகமாக 14,700 ரூபா செலுத்த வேண்டும் என கூறி மோசடி செய்துள்ளதாக பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இந்த தொலைபேசி அழைப்புகளுக்கும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கும் எந்தவித தொடர்புகளும் இல்லை.

இஸ்ரேலில் வேலை வாய்ப்பு எதிர்பாரத்து  விண்ணப்பிப்பதற்காக ஏற்கனமே பணம் செலுத்தியவர்கள் மீள பணம் செலுத்த தேவையில்லை.

எனவே, இவ்வாறான போலியான தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

இவ்வாறான தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் முறையிடுவதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் 1989 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பத்தாவது பாராளுமன்றத்தில்  துறைசார் மேற்பார்வைக் குழுக்களை...

2025-03-18 15:04:50
news-image

8 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள...

2025-03-18 14:51:05
news-image

மீன்பிடி படகுடன் 3 இந்திய மீனவர்கள்...

2025-03-18 14:05:02
news-image

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தவிசாளர்...

2025-03-18 14:03:08
news-image

சுகாதார தொழிற்சங்க நடவடிக்கையால் வவுனியாவில் நோயாளர்கள்...

2025-03-18 13:41:54
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-18 13:25:19
news-image

கல்முனையில் துணை வைத்திய நிபுணர்கள் வேலை...

2025-03-18 13:23:53
news-image

சிகிரியாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி உயிரிழப்பு...

2025-03-18 13:18:04
news-image

திருமலை நகரசபை ஊழியர்கள், உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பு...

2025-03-18 13:15:22
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ...

2025-03-18 12:43:13
news-image

02 கிலோ கஞ்சா போதைப்பொருளுடன் இளைஞன்...

2025-03-18 14:51:37
news-image

மியன்மார் சைபர் கிரைம் மோசடி முகாம்களில்...

2025-03-18 13:11:10