பாராளுமன்ற தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டு விநியோகிக்கும் அலுவலர்களுக்கான செயலமர்வு யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (21) காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபனின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், கடந்த ஜனாதிபதி தேர்தல் நீதியாகவும் சுமுகமாகவும் நடைபெற்றதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தமது நன்றிகளை தெரிவித்தார்.
மேலும், தபால் மூலமான வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டுக்கள் மற்றும் உரிய ஆவணங்களை பொதியிட்டு விநியோகிக்கும் கடமையானது ஒரு குழுக்கடமை என்பதால் கடமைகளில் ஈடுபடும் அலுவலர்கள் வினைத்திறமையாக செயற்பட்டு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.
பாராளுமன்ற தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு கடமைகளில் ஈடுபடவுள்ள அலுவலர்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உதவித் தேர்தல் ஆணையாளர் அமல்ராஜ் விளக்கமளித்தார்.
இக்கலந்துரையாடலில் தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச்சீட்டு விநியோகிக்கும் கடமையில் ஈடுபடவுள்ள பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.


























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM