உங்களுக்கு வரமளிக்கும் கடவுள் யார்?

Published By: Digital Desk 2

21 Oct, 2024 | 10:22 PM
image

எம்மில் பலரும் குறைந்த வருவாயில் உழைத்துக் கொண்டிருப்பார்கள். சிலர் மாத சம்பளத்திற்கு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவார்கள். வேறு சிலர் கடை நிலை மற்றும் விளிம்பு நிலை ஊழியர்களாகவோ அல்லது தொழிலாளர்களாகவோ பணியாற்றிக் கொண்டிருப்பார்கள். 

இவர்கள் எப்போது தங்களது வாழ்க்கைத் தரம் உயரும்? என காத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் அதற்கான  உபாயத்தை குறித்து சிந்திக்கவும் மாட்டார்கள். 

விடயம் தெரிந்தவர்கள் எடுத்துரைத்தாலும் காதில் வாங்கிக் கொள்ள மாட்டார்கள். என்றேனும் ஒரு நாள் இவர்களுக்கு ஏதேனும் ஒரு வலிமையான பாதிப்பு ஏற்பட்ட பிறகு மாற்றம் குறித்து சிந்திப்பார்கள். 

ஆனால் இவர்களின் முன்னேற்றம் குறித்து எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் ஏற்கனவே பல குறிப்புகளை வழங்கிவிட்டு சென்று இருக்கிறார்கள். 

குறிப்பாக நீங்கள் எந்த லக்னத்தில் பிறந்திருக்கிறீர்களோ அந்த லக்னத்திற்கு யோகக்காரனாக இருக்கும் கிரகங்களை வழி படத் தொடங்கினால் உங்களது வாழ்க்கையில் மாற்றமும், ஏற்றமும், முன்னேற்றமும் உண்டாகும்.

நீங்கள் மேஷ லக்னமாக இருந்தால் குரு பகவானையும், சூரிய பகவானையும் நாளாந்தம் வணங்கி வர வேண்டும். 

ஞாயிற்றுக்கிழமை அன்று தவறாது சூரிய பகவானையும், வியாழக்கிழமையன்று தவறாது குரு பகவானையும் அல்லது குரு பகவானின் அம்சமான தட்சிணாமூர்த்தியையும் வணங்கிட வேண்டும். 

இவர்கள் வியாழக்கிழமைகளில் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து வணங்கினால் மாற்றம் விரைவில் ஏற்படும்.

ரிஷப லக்னத்தில் பிறந்திருந்தால் சனி பகவானை வணங்கிக் கொண்டே வாருங்கள். குறிப்பாக சனிக்கிழமைகளில் விரதம் இருந்து காகத்திற்கு எள் கலந்த சாதம் அல்லது தயிர் சாதத்தை தானமாக வழங்கிடுங்கள். 

வருடத்திற்கு ஒருமுறை சனி பகவானின் ஸ்தலத்திற்கு சென்று வணங்கி வாருங்கள். உலகம் முழுவதிலும் உள்ளவர்கள் சனி பகவானின் ஆலயம் என்றால் அது எமது அண்டை நாடான இந்தியாவின் தென்பகுதியில் உள்ள புதுச்சேரியில் இருக்கும் திருநள்ளாறு எனும் சிவத்தலமாகும். இங்கு சென்று வரும்போது உங்களுக்கு மாற்றம் ஏற்படும்.

மிதுன லக்னத்தில் நீங்கள் பிறந்திருந்தால் குரு பகவானையும், சனி பகவானையும் தவறாது வணங்கி வாருங்கள். 

குறிப்பாக வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து குரு பகவானை வணங்குவதும், குறைந்த பட்சம் ஒரு வேளையாவது விரதம் இருந்து குரு பகவானை வணங்குவதும் சனிக்கிழமைகளில் சனி பகவானை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்குவதும் உங்களுக்கான பலன்கள் விரைவில் கிடைக்கும். முன்னேற்றமும், மாற்றமும் ஏற்படும்.

கடக லக்னத்தில் பிறந்தவர்கள் செவ்வாய் பகவானையும், முருகப்பெருமானையும் வணங்கி வாருங்கள். செவ்வாய்க்கிழமைகளில் அருகில் இருக்கும் முருகப்பெருமானின் ஆலயத்திற்கு சென்று செவ்வாய் ஓரையில் சிவப்பு அரளி பூவினை மாலையாக தொடுத்து அர்ச்சனை செய்து வழிபட்டு வாருங்கள். தொடர்ந்து முருகனை மனதார ஒருமுகமான மனதுடன் வணங்கினால் மாற்றம் உறுதி.

சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் சுக்கிர பகவானையும், செவ்வாய் பகவானையும் தொடர்ந்து வணங்கி வர வேண்டும். 

வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை நெய் தீபம் ஏற்றி வணங்கி வருவதும், செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வணங்கி வருவதும் உங்களது வாழ்க்கையில் மாற்றத்தை உண்டாக்கும்.

கன்னி லக்னத்தில் நீங்கள் பிறந்திருந்தால் புதன் பகவானையும், சுக்கிரன் பகவானையும் தவறாது வணங்க வேண்டும். புதன்கிழமைகளில் பெருமாள் ஆலயத்திற்கு சென்று பெருமாளுக்கு துளசி மாலையை சாற்றி வழிபட வேண்டும். 

வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி வணங்கி வர வேண்டும். இந்த இரண்டு தினங்களில் விரதம் இருந்து வழிபட்டால் பலன்கள் விரைவாக கிடைக்கும்.

நீங்கள் துலாம் லக்னத்தில் பிறந்திருந்தால் சந்திர பகவானையும், புதன் பகவானையும் வணங்க வேண்டும். 

திங்கட்கிழமையில் சந்திர பகவானையும், சிவபெருமானையும் விரதமிருந்து வணங்க வேண்டும்.  புதன் கிழமையில் பெருமாளை துளசி மாலை சாற்றி வணங்க வேண்டும்.  சிவன் மற்றும் பெருமாள் வழிபாட்டினை தொடர்ச்சியாக மேற்கொண்டால் மாற்றம் ஏற்படும்.

விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்கள் சூரிய பகவானையும், சந்திர பகவானையும் வணங்கிட வேண்டும். 

குறிப்பாக ஞாயிற்றுக்கிழமையில் சூரிய நமஸ்காரமும், திங்கட்கிழமையில் சிவபெருமானையும் வணங்கிட வேண்டும். இந்த இரண்டு நாட்களிலும் ஒரு வேளை விரதம் இருந்து சூரியனையும், சிவனையும் வணங்கினாலும் அவர்களது பரிபூரணமான அருள் கிடைத்து வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.

தனுசு லக்னத்தில் பிறந்தவர்கள் சூரிய பகவானையும், செவ்வாய் பகவானையும் வழிபட வேண்டும். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய நமஸ்காரமும், செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானையும் வணங்கி வர மாற்றம் உண்டாகும். 

இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு புதன் பகவானும் அருள் புரிவார்.‌ ஆனால் இதனை உறுதிப்படுத்திக் கொள்ள உங்களது ஜாதகத்தை அனுபவிக்க குடும்ப ஜோதிடரிடம் காண்பிக்க வேண்டும்.

மகர லக்னத்தில் பிறந்தவர்கள் சுக்கிர பகவானை வணங்க வேண்டும். அதிலும் வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஓரை எனப்படும் காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று அங்கு தனி சன்னதியில் வீற்றிருக்கும் மகாலட்சுமி தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் மாற்றம் ஏற்படுவதை காணலாம்.

கும்ப லக்னத்தில் பிறந்தவர்கள் சுக்கிர பகவானை வழிபட வேண்டும். இவர்களும் வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து சுக்கிர ஓரை எனப்படும் காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை அருகில் இருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று தனி சன்னதியில் வீற்றிருக்கும் மகாலட்சுமி தாயாரை நெய் தீபம் ஏற்றி, தாமரை மலர் சாற்றி வழிபட்டால் மாற்றம் உண்டாகும். 

இவர்கள் குறிப்பாக விநாயக பெருமானுடன் இருக்கும் மகாலட்சுமி தாயாரை வணங்குவதும் சிறப்பான பலனை வழங்கும்.

மீன லக்னத்தில் பிறந்தவர்கள் செவ்வாய் பகவானையும், குரு பகவானையும் வணங்கிட வேண்டும். செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானையும், வியாழக்கிழமைகளில் குரு பகவானையும் விரதம் இருந்து வணங்கிட வேண்டும். 

எம்மில் சிலர் நீங்கள் குறிப்பிட்டது போல் விரதம் இருந்து வழிபட்டாலும் முன்னேற்றம் கிடைக்கவில்லையே ஏன்? என மனதில் கேள்வி எழக்கூடும். 

வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய பலன்களை வழங்கக்கூடிய யோகக்காரர்கள் இவர்கள் தான். ஆனால் சிலரது ஜாதகத்தில் லக்னாதிபதி 6, 8 ,12 , ஆகிய ஸ்தானங்களில் மறைந்திருந்தால்  அதற்கான வழிபாடு முறை மாற்றம் பெறும் . 

இது தொடர்பான கூடுதல் தகவல்களை உங்களது அனுபவிக்க ஜோதிட நிபுணர்களை அணுகி தெரிந்து கொள்ளுங்கள். 

அதே தருணத்தில் உங்களுடைய லக்னாதிபதி உங்களது ஜாதகத்தில் ஒன்று, ஐந்து ,ஒன்பது, மற்றும் ஒன்று, நான்கு, ஏழு, பத்து, பதினொன்று ஆகிய இடங்களில் இருந்தால் மேலே சொன்ன இறைவனை தொடர்ச்சியாக வணங்கினால் மாற்றம் என்பது உறுதியாக ஏற்படும்.‌

இது நீங்கள் பிறந்த லக்னத்திற்கு யோகத்தை வழங்கக்கூடிய நவகிரகங்களை வணங்கிட  மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளும் உபாயமாகும். 

இதனை முறையாக பாவித்து வாழ்க்கையில் முன்னேற்றத்தை அதனூடாக மகிழ்ச்சியையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

தொகுப்பு : சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்பட்ட நோய் குணமடைவதற்கான எளிய வழிப்பாட்டு...

2024-11-08 16:03:29
news-image

தன வரவு தங்கவும் அதிகரிக்கவும் செய்ய...

2024-11-06 17:34:34
news-image

ஆச்சரியம் அளிக்கும் பிரதோஷ வழிபாட்டின் பலன்கள்..!

2024-11-05 19:33:23
news-image

2024 நவம்பர் மாத ராசி பலன்கள் 

2024-11-04 19:05:00
news-image

புத்திர பாக்கியத்தில் ஏற்படும் தடைகளை அகற்றுவதற்கான...

2024-11-04 14:23:14
news-image

காணி தொடர்பான சிக்கல்களை களைவதற்கான எளிய...

2024-11-02 16:39:01
news-image

நினைத்த காரியத்தை வெற்றி பெறச் செய்யும்...

2024-10-30 15:58:45
news-image

கிருஷ்ணனின் அருளை பெறுவதற்கான கோவர்த்தன பூஜை..!

2024-10-29 16:49:13
news-image

காதலில் வெற்றி பெற்று திருமணத்தை நடத்துவதற்கான...

2024-10-28 17:20:35
news-image

சகல சம்பத்துகளையும் வழங்கும் பொம்மைகள்

2024-10-26 18:11:22
news-image

தடையின்றி தனவரவு அதிகரிக்க செய்ய வேண்டிய...

2024-10-25 05:59:27
news-image

கர்ம வினையை நீக்கும் எளிமையான வழிமுறை...!!?

2024-10-23 18:27:22