ஃபைப்ரோடெனோமா எனும் மார்பக கட்டி பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

Published By: Digital Desk 2

21 Oct, 2024 | 10:23 PM
image

இன்றைய திகதியில் எம்முடைய பெண் பிள்ளைகள் தங்களது உணவு முறை மற்றும் வாழ்க்கை நடைமுறையை மாற்றி அமைத்துக் கொண்டதால் இளம் வயதிலேயே பூப்படைகிறார்கள். 

மேலும் 15 வயது முதல் 35 வயது உள்ள பெண்களுக்கு மார்பகத்தில் கட்டிகள் ஏற்படக்கூடும். 

உடனே புற்றுநோய் கட்டியோ என அஞ்சுவர். ஆனால் வைத்தியர்கள் இத்தகைய மார்பக கட்டியை மருத்துவ மொழியில் ஃபைப்ரோடெனோமா என குறிப்பிடுகிறார்கள். 

மேலும் இத்தகைய கட்டி ஒரு மார்பகத்திலோ அல்லது இரண்டு மார்பகத்திலோ ஏற்படக்கூடும் என்றும், இத்தகைய கட்டி புற்றுநோய் பாதிப்பற்ற கட்டி என்பதால் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

ஃபைப்ரோடெனோமா எனும் இத்தகைய மார்பக கட்டி பெரும்பாலும் வலியை ஏற்படுத்தாது. இது உறுதியானதாகவும், மென்மையானதாகவும், றப்பர் போன்றும் இருக்கும். பெரும்பாலும் வட்ட வடிவமாகவே இருக்கும். 

இதனை தொட்டால் மார்பக திசுக்களுக்குள் எளிதாக நகரும். இத்தகைய மார்பக கட்டி பெரும்பாலும் ஒரு அங்குலம் அதாவது 2.5 சென்டிமீற்றர் அளவிற்கு பெரிதாக கூடும். 

மேலும் இத்தகைய கட்டி மாதவிடாய் சுழற்சிக்கு சில நாட்களுக்கு முன்பு மாற்றம் ஏற்படலாம். சிலருக்கு மென்மையாக இருக்கும். 

வேறு சிலருக்கு வலியை ஏற்படுத்த கூடும். சிலருக்கு இத்தகைய ஃபைப்ரோடெனோமா எனும் கட்டி ஒன்றுக்கு மேற்பட்ட கட்டிகள்.. ஒரே மார்பகத்தில் ஏற்படக்கூடும்.‌

இவர்கள் வைத்தியர்களை சந்தித்தால் அவர்கள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை, மம்மோகிராபி பரிசோதனை, பயாப்சி எனப்படும் திசு பரிசோதனை ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பர். 

இதன் முடிவுகளின் அடிப்படையில் அதன் வளர்ச்சியையும், தன்மையையும் வைத்தியர்கள் தீர்மானிப்பார்கள். 

இத்தகைய கட்டிகள் இரண்டு வகையாக இருக்கும். இதில் எந்த வகையினை சார்ந்த கட்டி உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதனை வைத்தியர்கள் துல்லியமாக அவதானித்து, அதனை சத்திர சிகிச்சை மூலம் உரிய தருணத்தில் அகற்றி முழுமையான நிவாரணத்தை வழங்குவார்கள். 

தற்போது இத்தகைய புற்றுநோய் அல்லாத மார்பக கட்டிக்கு ஃபிரீசிங் டெக்னாலஜி எனும் நவீன முறையில் மார்பக கட்டியை குளிர்வித்து உறைய வைத்து அதன்மூலம் அதனை அகற்றும் சிகிச்சையும் அறிமுகமாகி இருக்கிறது.  

பொதுவாக பெரும்பாலான பெண்களுக்கும், பெண்மணிகளுக்கும் இத்தகைய ஃபைப்ரோடெனோமா கட்டி காலப்போக்கில் தானாகவே மறைந்துவிடும். பாதிப்பை ஏற்படுத்தும் சிலருக்கு மட்டும் சத்திர சிகிச்சை மூலம் இதற்கு முழுமையான நிவாரணம் வழங்கப்படுகிறது.

வைத்தியர் கீர்த்தி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரத்த நாளங்களில் ஏற்படும் அனியூரிஸம் பாதிப்பிற்குரிய...

2024-11-08 15:42:09
news-image

பாத வெடிப்பு பாதிப்பிற்குரிய நிவாரண சிகிச்சை

2024-11-06 17:34:15
news-image

முதுகு வலிக்கான நிவாரணம் தரும் அங்கியை...

2024-11-05 19:33:05
news-image

அக்யூட் ஃபிப்ரைல் இல்னஸ் எனும் கடுமையான...

2024-11-04 17:07:17
news-image

பெண்மணிகளுக்கு ஏற்படும் பைலோட்ஸ் கட்டி பாதிப்பிற்குரிய...

2024-11-02 14:12:41
news-image

விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் ஹெர்னியா பாதிப்புக்குரிய...

2024-11-01 18:42:51
news-image

மீடியல் டைபியல் ஸ்ட்ரெஸ் சிண்ட்ரோம் எனும்...

2024-10-30 15:54:33
news-image

கேங்க்லியன் நீர்க்கட்டி எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-10-29 16:09:36
news-image

ஒட்டோமைகோசிஸ் எனப்படும் காதில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2024-10-28 17:20:21
news-image

சமச்சீரற்ற இதயத் துடிப்பு பாதிப்பை துல்லியமாக...

2024-10-26 18:35:49
news-image

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் சுழற்சி நிறுத்தப்...

2024-10-25 05:59:15
news-image

நீர்ச் சத்து குறைபாட்டின் காரணமாகவும் சிறுநீரக...

2024-10-23 18:28:12