(நெவில் அன்தனி)
நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் அமைந்துள்ள தசரத் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் தெற்காசிய மகளிர் கால்பந்தாட்ட சம்பியன்ஷிப்பில் பி குழுவில் இடம்பெறும் இலங்கை தனது இரண்டாவது போட்டியில் பூட்டானிடம் தோல்வி அடைந்தது.
இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2.00 மணியளவில் ஆரம்பமான போட்டியில் முதல் 25 நிமிடங்கள் பூட்டானுக்கு சவால் விடுத்து விளையாடிய இலங்கை அதன் பின்னர் எதிரணியின் திறமைக்கு ஈடுகொடுப்பதில் சிரமத்தை எதிர்கொண்டது.
பின்கள வீராங்கனைகளின் கவனக்குறைவு இலங்கையின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.
போட்டியின் 8ஆவது நிமிடத்தில் மைதானத்தின் வலது முன்கள வீராங்கனை நம்ஜியெல் டிமா தரையோடு மிக இலாவகமான பரிமாறிய பந்தை டெக்கி லாஸொம் கோலாக்கி பூட்டானை முன்னிலையில் இட்டார்.
14 நிமிடங்கள் கழித்து இலங்கை அணித் தலைவி துஷானி மதுஷானி சாதுரியமாக செயற்பட்டு பந்தை கோலினுள் புகுத்தி கோல் நிலையை சமப்படுத்தினார்.
ஆனால், அதன் பின்னர் பூட்டான் வீராங்கனைகள் மிகத் திறமையாக விளையாடி இலங்கை அணிக்கு நெருக்கடியைக் கொடுத்தனர்.
போட்டியின் 31ஆவது நிமிடத்தில் நம்ஜியெல் டிமாவின் ப்றீ கிக் பந்தை இலங்கையின் பின்கள வீராங்கனைகள் முறையாக தடுத்து திசை திருப்பத் தவறியதைப் பயன்படுத்தி பூட்டான் வீராங்கனை டோர்ஜி ஈடொன் தனது அணியின் இரண்டாவது கோலைப் போட்டார்.
அதன் பின்னர் தனது தவறுகளைத் திருத்திக்கொண்டு விளையாடிய இலங்கை அணியினர் தடுத்தாடுவதில் மிகத் திறமையாக செயற்பட்டனர்.
எவ்வாறாயினும் போட்டியின் 75ஆவது, 78ஆவது நிமிடங்களில் இலங்கையின் பின்கள வீராங்கனைகளுக்கு ஊடாக (த்ரூ பாஸ்) பந்து பரிமாற்றங்களில் ஈடுபட்ட பூட்டான் அடுத்தடுத்து 2 கோல்களைப் போட்டது.
இரண்டு சந்தர்ப்பங்களிலும் அணித் தலைவி பெமா சோடென் ஷெரிங் மிகவும் அலாதியாக பந்து பரிமாற்றங்களில் ஈடுபட்டு டெக்கி லாஸொம், நம்ஜியெல் டிமா மூலம் கோல்களைப் போடச் செய்தார்.
இறுதியில் இலங்கை 1 - 4 என தோல்வி அடைந்தது.
சில வருடங்களுக்கு முன்னர் 0 - 5 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த இலங்கை அணியைவிட தற்போதைய அணி போதிய பயிற்சி, போட்டிகள் இல்லாத நிலையில் சிறப்பாக விளையாடியது என கூறலாம்.
மாலைதீவுகளுக்கு எதிரான ஆரம்பப் போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை, தனது கடைசி லீக் போட்டியில் நேபாளத்தை வியாழக்கிழமை (24) எதிர்த்தாடவுள்ளது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM