கொழும்பு துறை­முக நகர அபி­வி­ருத்தி பணி­களை  மீளவும் ஆரம்­பிக்க திட்­டம்­

Published By: Raam

13 Jan, 2016 | 08:10 AM
image

அர­சாங்­கத்­தினால் இடை­நி­றுத்­தப்­பட்­டி­ருந்த கொழும்பு துறை­முக நகர அபி­வி­ருத்தி பணி­களை இன்னும் சில மாதங்­களில் மீளவும் ஆரம்­பிக்க திட்­ட­மிட்­டுள்ளோம். இதன்­போது நாட்­டிற்கு தீங்­கான அனைத்து அம்­சங்­க ளும் ஒப்­பந்­தத்­தி­லி­ருந்து நீக்­கப்­பட்டு மீள்­தி­ருத்தம் செய்­யப்­படும். அதன் பின்­னரே துறை­முக நகர் திட்டம் ஆரம்­பிக்­கப்­படும் என சர்­வ­தேச வர்த்­தக மற்றும் மூலோ­பாய அபி­வி­ருத்தி இரா­ஜங்க அமைச்சர் சுஜீவ சேன­சிங்க தெரி­வித்தார்.

மேலும் கொழும்பு - கண்டி அதி­வேக பாதையின் பணிகள் மூன்று வரு­டங்­களில் பூர்த்தி செய்­யப்­படும். யாழ்ப்­பாணம் வரை­யி­லான அதி­வேக பாதை ஐந்து வரு­டங்­களில் பூரத்தி செய்­யப்­பட முடியும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அங்கு இரா­ஜங்க அமைச்சர் மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

முன்­னைய ஆட்­சியின் போது இலங்­கையில் முத­லீ­டுகள் செய்­வ­தற்கு வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து எவரும் வருகை தர­வில்லை. ஆனாலும் தற்­போது பல தரப்­பட்ட வெளி­நாட்டு நிறு­வ­னங்­க­ளுடன் ஒப்­பந்தம் செய்­துள்ளோம். அனைத்து துறை­க­ளிலும் முத­லீ­டு­களை துரி­தப்­ப­டுத்­த­வுள்ளோம். திரு­கோ­ண­ம­லையில் இரும்பு மற்றும் வாகன தக­டு­களை உற்­பத்தி செய்ய திட்­ட­மிட்­டுள்ளோம். அத்­துடன் திரு­கோ­ண­மலை துறை­மு­கத்தை புன­ர­மைத்து பல்­வேறு முத­லீ­டு­களை மேற்­கொள்­ள­வுள்ளோம்.

மேலும் ஹம்­பாந்­தோட்டை துறை­முக வளா­கத்தை முத­லீட்டு ஊக்­கு­விப்பு வல­ய­மாக மாற்­றி­ய­மைக்க உள்ளோம். குறித்த வல­யங்­களில் வாகன தயா­ரிப்­பு­க­ளுக்­கான ஏற்­பா­டு­களை பூர்த்தி செய்­ய­வுள்ளோம். அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்­தினால் நாட்­டுக்கு பெரு­ம­ளவில் நஷ்டம் ஏற்­பட்­டுள்­ளது.

தற்­போது இலங்­கை­யுடன் முத­லீடு செய்­வ­தற்கு மெட்ரோ ரயில் தயா­ரிப்பு நிறு­வ­னங்கள் வருகை தரு­வ­தாக எம்­மிடம் அறி­வித்­துள்­ளன. அது­மாத்­தி­ர­மின்றி தற்­போது இலங்கை நிறு­வ­னங்­களை ஏனைய நாடு­களில் முத­லீ­டுகள் மேற்­கொள்­வ­தற்கு தயா­ராக உள்­ளன.

பொரு­ளா­தார ரீதி­யாக பல்­வேறு மாற்­றங்­களை நாம் முன்­னெ­டுக்க திட்­ட­மிட்­டுள்ளோம். மேலும் ரூபாவின் பெறு­மதி குறை­வ­தனை பற்றி பேசு­கின்­றனர். ரூபாவின் பெறு­மதி கட்­டுப்­பாட்­டுக்குள் வைத்­தி­ருப்­பதே சிறந்­த­தாக அமையும்.

இந்­நி­லையில் முன்­னைய ஆட்­சியின் போது ஆரம்­பிக்­கப்­பட்ட அபி­வி­ருத்தி பணிகள் ஒன்றும் நிறுத்­தப்­ப­ட­வில்லை. பல்­வேறு திட்­டங்கள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன. மேலும் சில அபி­வி­ருத்தி பணிகள் எதிர்­வரும் காலங்­களில் ஆரம்­பிக்­கப்­படும்.

அர­சாங்­கத்­தினால் இடை­நி­றுத்­தப்­பட்­டி­ருந்த கொழும்பு துறை­முக நகர அபி­வி­ருத்தி பணி­களை இன்னும் சில மாதங்­களில் மீளவும் ஆரம்­பிக்க திட்­ட­மிட்­டுள்ளோம். இதன்­போது நாட்­டிற்கு கேடான அனைத்து அம்­சங்­களும் ஒப்­பந்­த­தி­லி­ருந்து நீக்­கப்­பட்டு மீள்­தி­ருத்தம் செய்­யப்­படும். அதன் பின்­னரே துறை­முக நகர் திட்டம் ஆரம்­பிக்­கப்­படும் . சீன அர­சாங்­கத்­துடன் எமக்கு எந்­த­வொரு கோபங்­களும் கிடை­யாது. அவர்­க­ளி­ட­மி­ருந்து பெற முடி­யு­மான அனைத்து உத­வி­க­ளையும் நாம் பெற்­றுக்­கொள்வோம்.

துறை­முக அபி­வி­ருத்தி பணி­களின் போது இலங்கை அரசாங்கத்திற்கு ஐம்பது சதவீதம் உரித்தாகும் வகையில் திட்டம் ஆரம்பிக்கப்படும். இதேவேளை கொழும்பு - கண்டி அதிவேக பாதையின் பணிகள் மூன்று வருடங்களில் பூர்த்தி செய்யப்படும். அதிலிருந்து சுமார் ஐந்து வருடங்களில் யாழ்ப்பாணம் வரையிலான அதிவேக பாதை பூர்த்தி செய்ய முடியும். இதற்கான ஏற்பாடுகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைபொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:18:08
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56