நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'ஃபிரீடம்' எனும் திரைப்படத்தின் பிரத்யேகமான அறிமுக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் சத்ய சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ' ஃபிரீடம் ' எனும் திரைப்படத்தில் சசிகுமார், லிஜோமோல் ஜோஸ், மாளவிகா அவினாஷ், போஸ் வெங்கட், ரமேஷ் கண்ணா, சுதேவ் நாயர், 'பொய்ஸ்' மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
என். எஸ். உதயக்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தை விஜயா கணபதி'ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பாண்டியன் பரசுராமன் தயாரித்திருக்கிறார்.
ஈழ மண்ணின் விடுதலைக்காக போராடும் போராளி குழுவின் தற்கொலை படையினர் அண்டை நாடான இந்தியாவிற்குள் ஊடுருவி அங்கு செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர் ஒருவரை படுகொலை செய்ய திட்டமிடுகிறார்கள்.
இதன் அடிப்படையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவி 'ஃபிரீடம்' திரைப்படம் தயாராகி இருப்பதால் திரையுலக ரசிகர்களை கடந்து சர்வதேச நாடுகளின் பார்வையாளர்களையும், இந்திய மற்றும் தமிழக அரசியல்வாதிகளின் கவனத்தையும் கவர்ந்திருக்கிறது.
இந்த பிரத்யேக காணொளியில் ஈழ விடுதலைக்காக போராடும் போராளிகளிடம், 'எதுக்கு இந்தியாவிற்கு வந்தீர்கள் ? என காவல்துறை உயர் அதிகாரி வினா கேட்கிறார்.
அதற்கு பதிலாக படத்தின் டைட்டில் இடம்பெறுகிறது. இதனால் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM