நடிகரும், தயாரிப்பாளருமான கிருஷ்ணா சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் அப்பாதுரை பாரதிராஜா இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் கிருஷ்ணா மற்றும் நடிகை வர்ஷா விஸ்வநாத் ஆகிய இருவரும் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
நாகார்ஜுன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைக்கிறார்.
சஸ்பென்ஸ் மற்றும் எக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை டான் கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எல். கணேஷ் தயாரிக்கிறார்.
இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.
இதன் போது கிருஷ்ணா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'கழுகு' எனும் திரைப்படத்தின் இயக்குநர் சத்ய சிவா சிறப்பு அதிதியாக பங்குபற்றினார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' கிராமத்துப் பின்னணியில் அனைத்து தரப்பு ரசிகர்களும் கவரும் வகையில் சஸ்பென்ஸ் மற்றும் ஆக்ஷன் கலந்த திரைக்கதையாக இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தமிழக மாநகர்களான திருச்சி மற்றும் மதுரை புறநகர் பகுதியில் நடைபெற்று வருகிறது.
விரைவில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் '' என்றார்.
நடிகர் கிருஷ்ணாவின் நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் 'ஜோஷ்வா இமைப் போல் காக்க' எனும் திரைப்படம் வெளியானது என்பதும், கடந்த சில ஆண்டுகளாக இவர் குணச்சித்திர கதாபாத்திரத்தில் மட்டும் நடித்து வந்தார் என்பதும், சிறிய இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தின் மூலம் மீண்டும் கதையின் நாயகனாக நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM